24 special

வச்சாலும் வச்சாரு சரியான ஆப்பு அண்ணாமலை...!சில்வர் பெட்டி பைல்களால் உருளப்போகும் தலைகள்...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகின்ற 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தனது நடை பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டி.எம்.கே பைல்ஸ் ஒன் சொத்து பட்டியல் வெளிவந்ததும் திமுகவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் டி.எம்.கே பைல்ஸ் டு என்ற பட்டியலை அண்ணாமலை “என் மன் எண் மக்கள்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் நடை பயணத்திற்கு முன் வெளியிட்ட பிறகுதான் நடை பயணத்தை தொடங்குவேன் என்ற வாக்குறுதியையும் கொடுத்திருந்தார்.


டி.எம்.கே பைல்ஸ் ஒன் சொத்து பட்டியலில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை மட்டும் தான் குறிப்பிட்டிருந்தார். ஆனால் டி.எம்.கே பைல்ஸ் 2 பட்டியலில் எந்தெந்த அமைச்சர்களுக்கு எந்தெந்த ஊரில் எவ்வளவு சொத்து உள்ளது முதற்கொண்டு மேலும் அவர்களின் பினாமிகள் விவரங்கள் மற்றும் யார் யார் பெயரில் எவ்வளவு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருக்கின்றது என்பதுவரை  தெளிவாக தகவல்கள் அதில் இருப்பதாக தெரிகிறது.

டி.எம்.கே பைல்ஸ் டு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஆளுநர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்ற செய்தியும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே டி.எம்.கே பைல்ஸ் ஒன் செத்துப் பட்டியலில் விவகாரத்தில் சிக்கினால் நீதிமன்றம் வரை வழக்கு சென்றாலும் ஆதாரங்கள் இல்லாத நிலையில் அந்த வழக்குகள் நீர்த்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆனால் இப்போது பினாமிகள் பெயர் வெளிவரும் பட்சத்தில் பினாமிகளே அலறி அடித்துக்கொண்டு தங்கள் அமைச்சர்கள் பெயரை காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என தகவல்கள் கூறுகின்றன.

ஏனெனில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ஆகிய துறைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆளுநர் பரிந்துரைத்தால் முதலில் நிச்சயம் அந்த பினாமிகள் தான் சிக்குவார்கள் பின்னர்தான் சம்மந்தப்பட்ட அமைச்சர் சிக்குவார் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர், அப்படி பினாமிகள் சிக்கும் பட்சத்தில் அவர்களே யாருடைய சொத்து இது, யாருக்கு பினாமியாக உள்ளேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அது நிச்சயம் சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு ஒட்டுமொத்தமாக உறுதியான ஆதாரமாகிவிடும் இது சம்மந்தப்பட்ட அமைச்சரை சிறை தண்டனை வரை இழுத்துச்செல்லும் என தகவல்கள் கசிந்துள்ளன. இந்த விவகாரம்தான் சில முக்கிய அமைச்சர்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.

மேலும் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது  பதிவில் .இன்று மூத்த தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆரன் ரவியை சந்தித்ததாகவும் மேலும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் திமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக குடும்பங்கள் அடங்கிய பினாமி ஆவணங்களையும் மற்றும் 5500 கோடி மதிப்பிலான ஊழல் ஆதாரங்களையும் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் கொடுத்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்படி  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் பைல்ஸ் டு விஷயத்தில் ஆளுநரை சந்தித்து ஆவணங்களை ஒப்படைத்தது திமுகவினருக்கு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே ஆளுநர் தரப்பிற்கும், அறிவாலயத்திற்கும் ஆகாத நிலையில் திமுகவின் பைல்ஸ் 2 வெளியிட்டால் சர்ச்சைகள் கண்டிப்பாக வெடிக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.