24 special

ராஜ்பவனுக்கு சென்ற ஆதார பெட்டி! முதல்வருக்கு ஏற்பட்ட திக் திக்!

Mkstalin,rnravi
Mkstalin,rnravi

தமிழகத்தின் அரசியல் மாற்றங்களை சில ஆளுங்கட்சி தான் செய்யும் என்று இதுவரை பார்த்து வந்த காலங்கள் போல் எதிர்க்கட்சியாலும் அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபிக்கும் வகையில் தமிழக பாஜக திமுகவிற்கு அடி மேல் அடிகளை கொடுத்து வருகிறது என திமுகவினரே கூறும் அளவிற்க்கு தற்போது அரசியல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக குடும்பம் இதுவரை சேர்த்துள்ள சொத்து பட்டியல்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்த பட்டியலுக்கு எந்த ஒரு விளக்கமும் திமுக தரப்பில் வழங்கப்படவில்லை அதற்கு மாறாக அமைச்சரவையை மாற்றம் செய்யும் அளவிற்க்கு வெடித்தது விவகாரம்! 


அதோடு டி ஆர் பாலு அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார் அதற்கான நீதிமன்ற விசாரணையும் தற்போது நடந்து கொண்டிருக்கிற நிலையில் திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார் அந்த சொத்து பட்டியலில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பினாமி பெயரில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்துள்ளனர் என்பதை வெளியிடப் போவதாக தெரிவித்தார். அதன்படியே நடைபயணம் மேற்கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நேற்றைய தினம் மாலை பொழுதில் திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகத்தை வீடியோவாக வெளியிட்டார். 

வெளியிட்டது மட்டுமல்லாமல் தமிழக ஆளுநரிடம் அந்த இரண்டாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து தரவுகளோடும், ஒரு பெட்டி  நிறைய ஆதாரங்களோடு தமிழக ஆளுநரை சந்தித்து இது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னதாக திமுகவின் சொத்து பட்டியலின் முதல் பாகமும் பாஜகவால் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் மாநாடு வேலைகளுக்காக திருச்சியில் முகாமிட்டுள்ளார்..

இந்த முறையும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மறுபடியும் தமிழகத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு திருச்சி சென்று நாடாளுமன்ற பணிகளை துவக்கியுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். மேலும் அங்கு திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்க வேண்டும் என்பதற்காகவே தேர்தலின் ஈடுபடும் வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக திருச்சி சென்று அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் எனவும் திமுக தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு ஆளுநரிடம் அதற்கான முழு தகவல்களையும் கொடுத்துள்ளதால், ஆளுநர் மாளிகையில் என்ன விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அண்ணாமலை முன் வைத்துள்ள கோரிக்கைக்கு ஆளுநர் என்ன விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார் என்பது பற்றி முதல்வர் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டதாகவும், இதற்கு அடுத்தபடியாக என்ன நடக்கும் என்று திமுகவைச் சேர்ந்த சட்ட வல்லுநர்களிடம் கேட்டறிந்து கொள்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆளுநர் மாளிகையில் அண்ணாமலை வீசிய அஸ்திரம், கண்டிப்பாக பெரும் புயலை கிளப்பும் என பேசப்பட்டு வந்த நிலையில் நமது வெற்றிக்கான திருப்புமுனையாக திருச்சி அமையும் என்று திருச்சிக்கு வந்தால் திருச்சிக்கு வந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே நமது தோல்விக்கான திருப்புமுனை அமைந்து விட்டதே என்ற நினைப்பு முதல்வரை வேறு எந்த நிகழ்விலும் கவனம் செலுத்த விடாமல் சொத்து பட்டியல் விவகாரத்தில் அப்செட்டாக இருந்ததாக சில தகவல்கள் கசிந்துள்ளன.