தமிழகத்தைப் பொறுத்தவரையில் டாஸ்மாக் துறை என்பது ஒரு அமைச்சரின் பதவியையே பறிக்க வைத்த ஒரு துறை. இந்த துறையால் எழுந்த பிரச்சனைகள் தான் தற்போது செந்தில் பாலாஜி அரசியல் வாழ்க்கையே பாதி முடிவுற்று புழல் சிறையில் இருந்து வருகிறார்.
அதாவது டாஸ்மாக் துறையில் செய்த ஊழல்கள் டாஸ்மாக்கில் வேலை பார்த்த ஊழியர்கள் மூலமாகவே வீடியோக்கள் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. மேலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கரூர் கேங் என்று கூறப்படுகின்ற ஒரு கும்பல் வந்து அதிகமான தொகை கேட்பதாகவும் அதற்காகவே மது பாட்டில்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும் டாஸ்மார்க் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த பொழுது இந்த கரூர் கேங்கிற்கு பின்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமார் இருக்கிறார்கள் என்ற உண்மை செய்திகளில் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது பதவியை இழந்து அதிமுக ஆட்சியில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது செய்த முறைகேடுக்காக தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார் என்றாலும் டாஸ்மார்க் துறையில் நடந்த முறைகேடு குறித்த புகார்கள் இன்றும் நிலுவையில்தான் உள்ளது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு புதிய டாஸ்மார்க் துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு டாஸ்மாக்கில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது பாட்டிலுக்கு அதிகமாக ரூபாய் வசூலிக்கப்படக்கூடாது என்றும் அரசு நிர்ணயித்த நிலையிலேயே பாட்டில்கள் விற்கப்படுகிறது என்ற போர்டுகளும் ஒவ்வொரு டாஸ்மார்க் கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த செய்தி பரவலாக பேசப்பட்டது. தமிழக அரசுக்கு டாஸ்மாக் துறையால் எந்த ஒரு கெட்டப்பெயரும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்து இருந்தார்.
ஏதேனும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அது சம்பந்தப்பட்ட அனைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்தது. மேலும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையிலேயே பேமெண்ட் செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இனிமேல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் டாஸ்மாக் கடைகளில் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது சில மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் பெறுவதை தவிர்ப்பதாகவும் ரொக்கத்திலேயே பணம் செலுத்தும் படியாக கூறுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டும் என்றால் பாட்டிலுக்கான உரிய பணத்தை மட்டுமே பெற முடியும் ஆனால் ரொக்கத்தில் பெற்றால் பாட்டில் விலைக்கு அதிகமாக பெற முடியும் அதற்காகவே சில டாஸ்மார்க் கடைகளில் இது போன்று ரொக்கத்தில் பணம் வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளது. இப்படியே இந்த நிலை நீடித்தால் கண்டிப்பாக டாஸ்மாக் துறை அடுத்த பிரச்சனையை சந்திக்கும் எனவும் இதனால் ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டு அமைச்சர் சிறைக்கு சென்றது போன்ற பல விஷயங்கள் நடந்ததால் தற்போது இதுவும் விரைவில் ஆபத்தை ஏற்படுத்தும் அது திமுக அரசிற்கு மேலும் பின்னடைவாக முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு அமைச்சர் டாஸ்மாக் துறையால் தற்போது சிறையில்இருக்கிறார் அனாலும் இந்த முறையும் சில முறைகேடுகள் தொடர்ந்தால் அடுத்த அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.