24 special

முறிந்த கூட்டணி...! கொண்டாடி தீர்க்கும் இணையங்கள்...!

EPs , pmmodi
EPs , pmmodi

கடந்தத வாரம் அண்ணாமலை பேசிய பேச்சுத்தான் தற்பொழுது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, அண்ணாதுரையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து முத்துராமலிங்க தேவர் 'இவனை யார் உள்ளே விட்டது? அடுத்த வாட்டி இவன் இப்படி பேசினான் என்றால் ரத்தத்தில் தான் மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும்' என மிரட்டிய விவகாரத்தை பொதுவெளியில் பேசினார். 


அப்படி பேசியதற்கு அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பாக கூற வேண்டும் என்றால் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான செல்லூர் ராஜு, ஜெயக்குமார், சி.வி சண்முகம் போன்றோர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு ஒரு படி மேலே போய் 'எங்களிடம் அண்ணாவைப் பற்றி பேசினால் நாக்கை துண்டாக்குவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்' என பேசியது பாஜகவை கொந்தளிக்க செய்தது. 

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் பொழுதே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் அமித்ஷா கேட்டதாகவும் அதாவது புதிய நீதி கட்சி ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், மற்றும் ஜி.கே. வாசன் இவர்களுக்கு எல்லாம் சேர்த்து 20 தொகுதி வேண்டும் என கேட்டதாக தகவல்கள் கசிந்தன. 

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அந்த 20 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளவில்லை மேலும் ஒரு சில விஷயங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பிடி கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் டெல்லியில் இருந்தும் 'தனியாக நிற்பதற்கு தயாராகுங்கள் அந்த நிலைமை கூட வரலாம்' என அண்ணாமலைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது என தகவல்கள் கசிந்தன. 

இப்படி ஒருபுறம் அண்ணாதுரை பற்றி அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதும் மறுபுறம் தொகுதி பங்கீட்டில் முறையான ஒரு எண்ணிக்கை சமரசமாக இல்லாத காரணத்தினால் கடந்த இரு தினங்களாக களத்திலும் இணையத்திலும் அதிமுக மற்றும் பாஜக இடையிலான வார்த்தை போர் தடித்து வந்தது. 

இதற்கெல்லாம் அதிகபட்சமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, '10 வருஷமாக துப்பாக்கி பிடித்த கை! என் தன்மானத்திற்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, நான் தவழ்ந்து வந்து பதவி வாங்கல! திருடனுக்கு போலீஸ பார்த்தா பயம் வரத்தான் செய்யும்' என்றெல்லாம் கூறி அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசிய பேச்சுக்கு கடுமையான எதிர்வினைகள் ஆற்றினார். 

அதன் காரணமாக இன்று காலை ஜெயக்குமார் தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'அதிமுக பாஜக கூட்டணி முடிந்துவிட்டது இனி அதிமுக பாஜக கூட்டணி இல்லை, தேர்தல் வரும் சமயத்தில் அவ்வப்போது அப்போது ஏற்படும் தேவைக்கு பார்த்துக் கொள்ளலாம்' என அறிவித்து விட்டார். 

இந்த நிலையில் இந்த விவகாரத்தை இணையத்தில் குறிப்பாக பாஜகவை சார்ந்த பெரும்பாலானோர் இதை கொண்டாடும் விதமாக பதிவிட்டு வருகிறார்கள். ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு கட்சி எப்படி தேசிய கட்சியை பேசலாம் அது மட்டும் இல்லாமல் திமுகவின் ஊழல்களை மட்டும் இதுவரை நாங்கள் பேசி வந்தது எதிர்க்கட்சிகள் குறிப்பாக நாம் தமிழர் போன்ற கட்சிகள் 'ஏன் அதிமுக ஊழலை பற்றி பேச மாட்டீர்களா' என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தார்கள். 

இப்பொழுது திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான் எனக் கூறும் ஆணித்தரமான இடத்தில் நாங்கள் நிற்கிறோம், அதிமுக போனது எங்களுக்கு ஒரு வகையில் நன்மைதான் களத்தில் தனியே நின்று குறைந்தபட்ச வாக்குகள் கிடைத்தால் கூட அது எங்களுக்கு பெருமைதான். 

இந்த தேர்தல் மோடிக்கான தேர்தல் மோடி வேண்டும் என தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் ஆகையினால் மோடி வேண்டும் என்பவர்கள் எங்களுடன் வரலாம் தேவையில்லாமல் பதவி மற்றும் கட்சி இவற்றையெல்லாம் கணித்துக் கொண்டு லாப நஷ்ட கணக்கு பார்த்தவர்களே எங்களுக்கு தேவை இல்லை என்பது போன்று சமூக வலைதளத்தில் இந்த முடிவை கொண்டாடி வருகின்றனர் பாஜக சார்பு இணையதள வாசிகள்.