24 special

நம் நாட்டில் எதற்காக முதலமைச்சர்? ஸ்டாலின் என்ன செய்கிறார்?...பிரபல நடிகை சரமாரி கேள்வி..!

mk stalin, kasthuri
mk stalin, kasthuri

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசியது:  காவிரி பிரச்சினையில் ஆளும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் மற்ற கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் முன்னும் காத்து வருகிறார். கர்நாடகாவுக்கு எதிராக நான் குரல் கொடுக்கிறேன். நீங்களும் தெரிவிக்கிறீங்க நம்ம முதலமைச்சர் என்ன பன்றாங்க கூட்டாளி கட்சிதான இண்டியா கூட்டணி தான கேட்டு வாங்குன என்ன? ஒரு நிமிடத்தில் தண்ணி கொடுக்க முடியுமா? இல்லை கூட்டணி கலைச்சுக்கவா? இதை சொல்லாமல் எதற்கு மவுனம் காத்து வருகிறார்.


இவரு தான் அகில இந்திய முதலமைச்சர் ஆகியே ஏன் வாய் மூடிட்டு இருக்குறாங்க? என்று சரசமரியாக க்ளெல்வி எழுப்பியுள்ளார். அவர்கள் தண்ணீர் தரவில்லை என்றால் நம் நாட்டில் விளையும் கறிகளை கொடுக்க வேண்டாம், மின்சாரம் தர வேண்டாம் என்று கூறினார்.மேலும், மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு குரல் இங்கு பல வகையில் குரல் எழுப்பி அறிக்கையை வெளியிட்டிங்க! காவிரி பிரச்சனைக்கு யாருக்கும் தெரியாமல் அணுகுவோம் என்று சொல்வது மிகவும் தவறு இது ஒரு எச்ச தனமான செயல், நேரடியா அணுகி இருக்க கூடிய பிரச்னையை தீர்க்கணும். வாக்குக்காக பணம் வாங்குங்கள், ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லும், அரசியல்வாதிகளுக்கு நம்முடைய பிரதான பிரச்சினையைக்கூட பேசத்திராணி இல்லாதவர்களாக இங்கு இருக்கின்றார்கள்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நடக்கக்கூடிய வேலை நிறுத்தத்தை கர்நாடக எல்லையில் நடத்த வேண்டும்.. நாம் ஏன் நம்முடைய மாநிலத்தில் பந்த் நடத்த வேண்டும்? எதுக்காக வருமானத்தையும், நம்முடைய வியாபாரத்தையும் ஏன் கெடுத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பேசிய கஸ்தூரி கர்நாடகாவில் திரைப்பட நடிகர்கள் போராடுகின்றனர். ஆனால் இங்கு இருப்பவர்கள் நமது படம் எல்லா இடத்திலும் ஓடணும், நாம் சம்பாதிக்கணும், யாரையும் பகைச்சிக்கக்கூடாது  என்று அதைத்தான் எண்ணுகிறார்கள். இதையெல்லாம் நினைக்கும் போது வெட்கக்கேடாக இருக்கிறது. எல்லா பிரச்சனைக்கும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் சத்யராஜ் இந்த காவிரி விவகாரத்திற்கு மட்டும் எங்கே போய் ஒளிந்து கொண்டார் என்று சரமாரியாக தாக்கியுள்ளார்.

 சித்தார்த் காங்கிரசுக்கும், இங்க இருக்க கூடிய திமுகவுக்கும் ஆதரவு அளித்து . மோடிக்கு எதிராக குரல் கொடுத்தார். அவரை அவமதிக்கப்ட்டது நிச்சயம் சித்தார்த் அனுபவிக்க வேண்டும் என்று சாடினார். கர்நாடகாவில் அவமதித்ததற்கு இங்கேயே இருப்பவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா ரெட் ஜெயிண்ட் நிறுவனம் படம் வாங்கியதற்கு நன்றி தெரிவித்து கொண்டு இருக்கிறார். சித்தார்த் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று தாக்கி பேசினார்.இதற்கிடையில்  லியோ படம் குறித்து பேசுகையில், தமிழ் சினிமாவில் கொச்சை வார்த்தைகள் இடம்பெறுவது முதல் முறை கிடையாது. லியோ படத்தில் விஜய் அதுபோன்ற வசனம் பேசி இருக்கக்கூடாது. கெட்ட வார்த்தை பேசிதான் விஜய் படத்திற்கு கவனம் ஈர்க்க வேண்டும் என்றோ ஓபனிங் பெற வேண்டும் என்றோ அவசியம் இல்லை. விஜய் அந்த காட்சியில் கெட்ட வார்த்தை பேசினால்தான் உக்கிரமாக இருக்கும் என்றால் அது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தோல்வி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.