24 special

2024ம் ஆண்டு பாஜக தலைமையில் ஆட்சி...? டெல்லியின் தீவிர ஆலோசனை!

Annamalai
Annamalai

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக கருத்து வேறுபாடு காரணமாக தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது. இதன் மூலம் தமிழக அரசியிலில் தேர்தல் களம் சூடுபிடித்தது. மக்களவை தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தவே பாஜக கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் நடைப்பயணத்தை தொடங்கினர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பயணம் 2ம் கட்டமாக கொங்கு மண்டலத்தில் எதிர் பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மக்களும் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதாக செய்திகளும் வெளியாகின.


நேற்று அதிமுக கூட்டணி இல்லை என அறிவித்தவுடன் அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி கேட்டதற்கு,  அமைதியாக இருங்கள், எங்களது தேசிய தலைவர்கள் இது குறித்து ஆலோசித்து வருகிறார்கள் கூடிய விரைவில் பதிலளிப்போம் என தெரிவித்தார். கூட்டணி முறிவை அறிவித்ததும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அந்த வகையில் கூட்டணி முறிவை நாங்களும் கொண்டாடுவோம் என்று பாஜக நிர்வாகிகள் கையில் கம்பி மத்தாப்பு கொளுத்தி, "எங்களுக்கு தீபாவளி, எடப்பாடிக்கு இனிமேல் தொடங்கபோது வயித்து வலி" என கோஷம் எழுப்பினர்.

தற்போது டெல்லி தலைமை இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமை கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலை சந்திக்கலாம் என தகவல் தெரிவித்திருக்கின்றனர். பாஜக தலைமையில் புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அதிமுக ( பண்ணீர்செல்வம் கட்சி), விஜயகாந்தின் தேமுதிக கட்சி, இந்திய ஜனநாயக கட்சி,  பாமக போன்ற கட்சிகளின் கூட்டணியில் மக்களவை தேர்தலில் சந்திக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளன. 

தேமுதிக தற்போது வரை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல் தனித்து நிற்கின்றது எனவே இக்கட்சி பாஜகவுடன் ஐக்கியமாகும் என தெரிகிறது. மேலும் பாமகவும் தேசிய கட்சிகளுடன் தான் கூட்டணி தொடரும் என தெரிவித்து வந்த நிலையில் பாஜகவுடன் கைகோக்கலாம் என்று தெரிகிறது. இப்படி கூட்டணிகள் அமைந்தால் பாஜக தனிமையில் காலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் என கூறப்படுகிறது. 

இதனை உறுதி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி  சிறப்பாக நடைபெற்று வருவதாக பாஜக முன்னாள் தேசிய தலைவர் சிடி ரவி கூறியுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இந்த காலகடத்துக்குள் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. மேலும், கட்சியைபி பலப்படுத்துவது என்பது ஒவ்வொரு நிர்வாகியின் கடமை என்று கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக தலைமையில் கூட்டணி அமைவது நிச்சயம் என உறுதியாகியள்ளது.