24 special

அண்ணாமலையின் விமர்சனம் குலுங்கி குலுங்கி சிரித்த மக்கள்....! புகைச்சலில் கமல் கட்சி...!

Annamalai,kamalhasan
Annamalai,kamalhasan

கோவையில் வைத்து நடிகர் கமல்ஹாசனை அண்ணாமலை விமர்சனம் செய்ததும் அதை கேட்ட பொதுமக்கள் குலுங்கி குலுங்கி சிரித்த வீடியோவும் தற்போது வைரலாகி வருவது திமுக மற்றும் கமல் கட்சியினர் மத்தியில் புகைச்சலை கிளப்பி இருக்கிறது.


கோவையில் பேசிய அண்ணாமலை திமுகவை தலைகீழாக எதிர்த்த கமலஹாசன்,பணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் சொல்லியபடி நடிக்கிறார் எனவும்,கமல்ஹாசனின் தன்மானத்தை உதயநிதியிடம்  அடகு வைத்து விட்டு கோவையில் போட்டியிடுவதாக கூறுகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்..

கோவை பாஜகவின் கோட்டை என்றும் பாஜக வேறு இடத்தில் வியர்வை கொடுத்து வளர்த்தது என்றால், கோவையில் ரத்தத்தை கொடுத்து வளர்த்தது என்று பேசியவர் கோவையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு கூட்டம் வருகிறது. கட்சிக்கு கூட்டம் வரவில்லை என பேசியிருக்கிறார். 2021 ல் சினிமாவில் யார் நடிக்கிறார்கள், நிஜத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து வானதி சீனிவாசனை மக்கள் வெற்றி பெற வைத்தார்கள்.

கமல்ஹாசன் நன்றாக நடிப்பதை பார்க்க விக்ரம் படத்திற்கு கூட்டம் வருகிறது.திமுகவை தலைகீழாக எதிர்த்த கமல்ஹாசன்,பணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் சொல்லியபடி நடிக்கிறார்.கமல்ஹாசன் கால் தூசிக்கு உதயநிதி ஸ்டாலின் சமமா? கமல்ஹாசன் தன்மானத்தை உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவியிடம் அடகு வைத்து விட்டு கோவையில் போட்டியிடுவதாக சொல்கிறார்.

பெரும்பாலான பெண்களுக்கு உரிமை தொகை வரவில்லை. பல வரிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தை கடன்கார, குடிகார மாநிலமாக திமுக‌ அரசு மாற்றியுள்ளது சனாதனம் குறித்து பேசிய பட்டத்து இளவரசர் உதயநிதி மீது தமிழகத்தில் பாஜகவினர் 400 பேர்  புகார் அளித்து பட்டத்து இளவரசர் மீது 1 வழக்கும் இல்லை. சனாதனத்தை இழிவுபடுத்திய திமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் டெபாசிட் இழந்து தோற்க வேண்டும். 33% மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால் பிரதமரை கடவுளாக பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.