நம் நாட்டில் உள்ள பெற்றோர்களின் முக்கிய ஆசையாக நம் குழந்தை ஒரு அரசு வேலையில் இருக்க வேண்டும் என்பது இருக்கும். ஏனென்றால் அரசு வேலையானது ஓய்வு பெறும் வரை நிரந்தரமானது ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் கிடைக்கும். அதுமட்டுமின்றி அரசு அதிகாரத்தில் தனது குழந்தை பணியாற்றுகிறது என்று அவர்கள் பெருமையுடனும் கூறிக் கொள்வதையும் விரும்புவார்கள். இந்த நிலையில் அரசு வேலைகளிலே மிக உயர்ந்த பணியாக கருதப்படுகின்ற குடியரசுத் தலைவர்,.துணை குடியரசுத் தலைவர் பிரதமருக்கு எவ்வளவு ஊதியம் அவர்கள் என்னென்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள் ஓய்வூதியம் எவ்வளவு என்பது குறித்த முழு தகவலும் வெளியாகி உள்ளது. முதலில் நம் நாட்டின் முதல் குடிமகனாக உள்ள குடியரசு தலைவருக்கு எவ்வளவு ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை குறித்து பார்க்கலாம்.
1951 ஆம் ஆண்டு குடியரசு தலைவருக்கான ஊதியத்தை ஜனாதிபதியின் சாதனை மற்றும் ஓய்வூதிய சட்டம் தீர்மானிக்கிறது. அதன்படி குடியரசு தலைவருக்கு மாதம் ரூபாய் 5 லட்சம் ஊதியமாகவும் அனைத்து வரிச்சலுகைகளும் குடியரசு தலைவருக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர ஊதியம் மட்டுமின்றி பல அலவன்ஸ்களும், குடியரசு தலைவர் தங்குவதற்காகவே 370 அறைகளை கொண்ட குடியரசு தலைவர் மாளிகை வழங்கப்படுகிறது, அந்த மாளிகைக்கு ராஷ்டிரபதி பவன் என்று பெயருண்டு! இதைத் தவிர வீட்டு வசதி, மருத்துவம் மற்றும் அலுவலக செலவுகளுக்காகவும் குடியரசு தலைவருக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் குடியரசு தலைவர் தனது பதவி காலத்தில் உலகத்தில் உள்ள எந்த பகுதிக்கும் இலவசமாக ரயில் மற்றும் விமானத்தில் இலவசமாக பயணிக்கவும் சலுகை உள்ளது, அதோடு குடியரசு தலைவர் ஓய்வு பெற்ற பிறகு மாதம் 1.5 லட்சம் அவருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இதைத் தவிர குடியரசு தலைவர் தங்குவதற்கு வாடகை இல்லாத அரசு மாளிகையும், 2 லேண்ட்லைன் மற்றும் 1 மொபைல் போனும், ஓய்வு பெற்ற பிறகு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குடியரசுத் தலைவர் ஓய்வு பெற்றாலும் கூட குடியரசுத் தலைவரின் உறவினர் முறையில் கூடுதலாக ஒருவருக்கு விமானம் மற்றும் ரயில்களில் இலவச பயணச்சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் நாட்டின் முதல் குடிமகனுக்கு/மகளுக்கு வழங்கப்படுவதை நினைத்து பார்க்கும் பொழுது நாமும் எப்படியாவது குடியரசுத் தலைவராக வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது!! குடியரசுத் தலைவரை தொடர்ந்து துணை குடியரசு தலைவருக்கு என்னென்ன சலுகைகள் என்பதையும் பார்க்கலாம், இவர் குடியரசுத் தலைவர் இல்லாத இடங்களிலும் ராஜ்யசபாவிற்கும் முழுமையான பொறுப்பில் உள்ளார்.
அதோடு குடியரசு தலைவருக்கு என்னென்ன சலுகைகள் உள்ளதோ அனைத்து சலுகைகளும் துணை குடியரசு தலைவருக்கும் உள்ளது ஆனால் துணை குடியரசு தலைவருக்கு மாதம் 4 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஊதியத்தை தவிர மற்ற அனைத்துமே குடியரசு தலைவருக்கு இருக்கின்ற அனைத்து சலுகைகளும் துணை குடியரசு தலைவருக்கும் வழங்கப்படுகிறது. இப்படி நாட்டின் முதல் இரண்டு அரசுப் பொறுப்பில் இருக்கும் குடியரசுத் தலைவர் துணை குடியரசுத் தலைவருக்கு உள்ள சலுகைகளை பார்த்தோம் தற்போது மூன்றாம் நிலையில் உள்ள பிரதமருக்கு என்ன சலுகைகள் என்பதையும் பார்ப்போம்.... அதாவது இந்திய அரசியலமைப்பின் மூன்றாவதாக அதிகாரங்களை கொண்ட பிரதமருக்கு மாதம் 1.66 லட்சம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது மேலும் இதில் அவரது அடிப்படை ஊதியம் 50,000 என்றும் இதை தவிர 3,000 அவரது அலவென்ஸ்காகவும் 45 ஆயிரம் நாடாளுமன்ற உதவித் தொகையாகவும் ரூபாய் 2,000 தினசரி உதவித்தொகையாகவும் பெறுகிறார். மேலும் வாடகை இல்லாமல் வீடு, பிரதமரின் பாதுகாப்பிற்கு எஸ் பி ஜி என்ற பாதுகாப்பு குழுவும், பிரதமரின் பயணத்திற்காக விமானம் மற்றும் ரயில் போன்றவற்றிற்கு இலவச சலுகைகள், பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அதற்கான முழு செலவுகள் என அனைத்தையும் அரசே வழங்குகிறது.