நடிகர் விஜய் நடித்த படம் லியோ நேற்று உலகமெங்கும் வெளியானது. சமூக தளத்தில் முழுவதும் லியோ படத்தை பற்றியே காட்சிகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில் லியோ படத்திற்கு சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கத்தின் காரணமாகவே ரசிகர்களிடம் விஜய் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் விஜய் அரசியல் வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததும், அதற்கான முழு ஏற்பாடுகளை நோக்கி செல்வதும் தான் காரணம். இந்த சமயத்தில் தான் அவர் நடித்த லியோ படம் வெளியாகியிருக்கிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட வாரியாக தலைவர்களை தேர்ந்தெடுத்து முன்னணி தலைவர்களின் படத்திற்கு மாலை அணிவிக்கவும், இரவு நேர பாடத்திட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய விஜய் உத்தரவிட்டு இருந்தார். முன்னதாக 234 தொகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்தவர்களை விஜய் நேரில் அழைத்து அந்த மாணவச்செல்வங்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அந்த மாணவர்களை மாணவ, மாணவிகளாக விஜய் பார்க்காமல், அவர்கள் அனைவரையும் வருங்கால வாக்காளர்களாக பார்க்கிறார் என்றும் அப்போது விமர்சனங்கள் பேச தொடங்கின.இதற்கிடையில் விஜய் அரசியிலுக்கு வருவது உறுதியான நிலையில் அவர் நடித்த லியோ படத்திற்கான ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் தடை செய்யப்பட்டது.
இதற்கு திமுக தான் காரணம் என விஜய் ரசிகர்கள் சமூக தளத்தில் கருத்துக்களை தெரிவித்தனர்.இதையெல்லாம் தாண்டி லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அதிமுக மற்றும் நாம் தமிழார் கட்சி சீமான் போன்றவர்கள் விஜயை பார்த்து திமுக பயந்துவிட்டது என்று வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். பல சிக்கல்களை கடந்து நேற்று லியோ படம் வெளியானது.இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று காலையிலிருந்து முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் மேற்பார்வையில் இருக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விஜயின் செல்வாக்கை பற்றி அறிய ஒரு திடீர் சர்வே எடுக்க அறிவுறுத்தினர். தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வாரியாக கிராமம் முதல் நகரம் வரை விஜய்க்கு பேனர், பிளக்ஸ் வைத்தவர்கள் யார் அவர்களுக்கு அந்த ஊரில் என செல்வாக்கு இருக்கிறது என்று விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு கிடைத்த விவரங்களின் படி 60 முதல் 65 சதவீத கிராமங்களில் உள்ள 20முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் தான் சாதி, மத வேறுபாடு இன்றி வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களது கை காசு போட்டு வைத்துள்ளனர் என்ற தகவலை சேகரித்து அனுப்பியுள்ளனர். திமுகவில் உதயநிதி எப்போது தலைமை பொறுப்பேற்கிறாரோ அப்போது தான் விஜய் அரசியல் களத்தில் இறங்குவார் என்றும் அதுவரை விஜய் பொறுமை காப்பர் என்றும் பேசப்பட்டு வருகிறது. உதயநிதி திமுகவை கையில் எடுக்கும்போது விஜய் அவருக்கு சவாலாக இருப்பார் என்று எண்ணி திமுக தற்போது இது போன்ற சர்வேக்களை எடுக்க தொடங்கியிருப்பதாக திமுக வட்டாரங்களே தெரிவிக்கின்றனர்.