கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்ட என் மண் என் மக்கள் நடைபயணம் கோலாகலமாக தொடங்கி ராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி மதுரை விருதுநகர் திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற பகுதிகளை முடித்துவிட்டு தற்போது முதல் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.
இந்த முதல் கட்டம் முழுவதும் அண்ணாமலையால் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு நாளுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருவதாக இருந்தது என களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் அண்ணாமலை எங்கிருக்கிறார் எந்த தொகுதியில் இருக்கிறார் என்ன நலத்திட்டம் செய்தார் என்பது பற்றிய தேடல்கள் மக்கள் மத்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அண்ணாமலைக்கும் பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் நூற்று கணக்கான மக்கள் கூடி இருந்த வீடீயோக்களும் இணையத்தில் வைரல்...! அதற்கேற்றார் போல் அண்ணாமலையும் மக்களின் ஈடுபாடுக்கு ஈடுகொடுத்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து சில குறைகளை அவ்வப்போது தீர்த்து வந்த தகவல்களும் செய்திகளில் வெளியானது.
ஆரம்பத்தில் ராமநாதபுரத்தில் உள்ள தனது தொண்டருக்காக வீடு கட்டும் ஏற்பாடுகளை ஆரம்பித்த அண்ணாமலை இடையில் ஒரு குடும்பத்தின் வீட்டு நிலைமை கண்டு அவர்களுக்கு சில வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து வீதிதோறும் போடப்பட்டிருந்த கடைகளில் நின்று உரையாடி அவர்கள் கொடுக்கும் பொருட்களை பணம் கொடுத்து பெற்றுக் கொண்டு ஒவ்வொரு சிறு தொழில்களையும் உற்சாகப்படுத்தி இதுவரை வெளியில் தென்படாத சில தொழிலாளர்களை பற்றியும் எடுத்துரைத்து அவர்களுக்கான சில நலத்திட்டங்களையும் கூறி தற்போது தென் மண்டலங்களுக்கு சென்றாலே பாஜகவின் வாசம் வீசுகிறது என்ற வகையில் அண்ணாமலை தற்போது முதல் கட்ட நடை பயணத்தை சிறப்பாக முடித்துள்ளார்.
தற்போது அந்த யாத்திரைக்கான ஓய்வு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்து செப்டம்பர் மூன்றாம் தேதி கொங்கு மண்டலத்தில் இருந்து யாத்திரை தொடங்குகிறது. அதற்குப் பிறகு திருச்சி மற்றும் அதை ஒட்டி உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் அண்ணாமலை. இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் 25ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆயத்தமாகி திருச்சி சென்று அங்கிருந்து கும்பகோணம் சென்றுள்ளார் முதல்வர்...!
ஏற்கனவே தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அண்ணாமலை மேற்கொண்ட யாத்திரையால் திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு அதிகம்! இதனால் திமுக தனது பயிற்சி பாசறை கூட்டத்தை ராமேஸ்வரத்தில் நடத்தியது அதற்கு முதல்வரே தலைமை ஏற்றார்.
தற்போது திமுக வலுவாக இருக்கக்கூடிய டெல்டா மாவட்டங்களில் அண்ணாமலையின் பாதயாத்திரை வந்தால் கண்டிப்பாக திமுக விற்கு மேலும் அதிக பின்னடைவை ஏற்படுத்தும், அதுமட்டுமில்லாமல் டெல்டா மாவட்டங்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டம், காவிரி நீர் திறந்து விடப்படாமல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் போன அவலம் என தொடர்ச்சியாக டெல்டா பகுதி மக்கள் ஆளும் திமுக அரசின் மீது கொதிப்பில் இருந்து வரும் நேரத்தில் அண்ணாமலை வேறு அப்பகுதியில் யாத்திரை என உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக அது பிரச்சனையில் முடியும் நிறைய பேர் பாஜகவின் வாக்கு வங்கியாக மாறிவிடுவார்கள் என்பதை தெரிந்து தற்போது திமுக தலைமை மூன்று நாட்கள் திட்டத்துடன் டெல்டா பகுதியில் நுழைந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.