அண்ணாமலை மேற்கொண்ட யாத்திரை நாளுக்கு நாள் மக்கள் மத்தியிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் பெரும் மாற்றத்தை உண்டாக்குகிறது என மாநில உளவு அமைப்புகள் தலைமைக்கு தகவல் கொடுத்து கொண்டு இருக்க இனியும் அமைதியாக இருக்க கூடாது என உடனடியாக இராமநாதபுரம் சென்று மீனவர் மாநாடு நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
ஆனால் என்னதான் திமுக தரப்பில் முயன்றாலும் மக்கள் மத்தியில் பாஜகவிற்கு ஆதரவான நிலை உண்டாகி இருப்பது மக்கள் கருத்துக்கள் மூலம் வெளிவர தொடங்கி இருக்கிறது, இந்த நிலையில் இருவர் சொன்ன தகவல் திமுகவின் நாடாளுமன்ற கனவை உடைத்து இருக்கிறது.
முன்னெல்லாம் வெளிநாட்டில் இந்தியர்கள் என்றால் ஊழல் நிறைந்த நாடு என சொல்வார்கள் ஆனால் இப்போது மோடி வந்த பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பே உயர்ந்து இருக்கிறது என ஒருவர் கூறினார் அப்போது அண்ணாமலையிடம் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித ஈர்ப்பு வந்து இருக்கிறதா என கேட்க அருகில் இருந்த பெரியவர் சட்டென ஆவேசமாகி ஏன் அண்ணாமலைக்கு ஆதரவு வரக்கூடாதா கண்டிப்பாக அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி இருக்கிறது.
எங்கோ வெளிமாநிலத்தில் நடக்கும் குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் நபர்கள் தமிழ்நாட்டில் அதே குற்றம் நடந்தால் வாய் திறக்க மாற்றான் அண்ணாமலை வரணும் அவர் வருவார் அவரால் மாற்றம் உண்டாகும் என ஆவேசமாக பேசி விட்டார்.
இவை அனைத்தையும் தாண்டி நாங்கள் 15 நாட்கள் பெண் குழந்தையை காணோம் என புகார் கொடுக்க காவல்துறை அழைக்களித்தது ஆனால் அண்ணாமலை எங்க ஊருக்கு வரார் அவரிடம் புகார் சொல்ல போறோம் என சொன்ன அன்று இரவே குழந்தையை மீட்டு கொண்டுவந்து விட்டார்கள் இதைவிட வேற என்ன வேணும் என சொன்னார்கள்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வட்டம் அடிக்க தொடங்கி இருக்கிறது, ஒரு கட்டத்தில் அண்ணாமலை மேற்கொண்ட யாத்திரை என்ன செய்துவிட போகிறது என அசால்டாக இருந்த திமுகவினர் இப்போது பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக தெரிவிக்கும் கருத்தை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.