24 special

ஒட்டுமொத்த திரையுலகமே கொண்டாடிய மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கு வந்த நிலைமையா இது!! வழக்கில் சிக்கியுள்ள தயாரிப்பாளர்கள்..... அமலாக்கத்துறை இறங்கும் அளவிற்கு சென்ற அவலம்...

Manjumal Boys
Manjumal Boys

எந்த மொழி மொழி படமாக இருந்தாலும், நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம், கதை,.வசனம், பாடல் என பல துறைகள் இணைந்து ஒன்றாக சேரும் பொழுது தான் அந்தப் படம் வெற்றியா! தோல்வியா! என்பது தெரியவரும். மேலும் கதைக்களம் என்பது மற்ற அனைத்தையும் விட மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் அந்தப் படத்தை மக்கள் தூக்கி கொண்டாடுவார்கள். ஆனால் சமீப காலங்களாகவே அதிக பட்ஜெட்டில் எடுத்தால் மட்டுமே அந்த படம் அருமையாக ஓடும் மக்கள் வந்து பார்ப்பார்கள் மக்களின் எதிர்பார்ப்பை அந்த படம் பூர்த்தி செய்யும் என்ற வகையிலான பிம்பம் இருந்தது. ஆனால் இவற்றை மலையாள திரையுலகம் மொத்தமாக மாற்றி மக்கள் கதையைத்தான் விரும்புகிறார்கள் என்பதை நிரூபித்துள்ளது. 


அதாவது கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட படம் தான் மஞ்சுமல் பாய்ஸ். இந்த படம் மலையாளத்தில் உருவாக்கப்பட்டாலும் தமிழ் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழில் நல்ல வசூல் வேட்டையையும் இப்படம் பெற்றது. ஏனென்றால் தமிழ் சினிமாவில் குணா திரைப்படம் ஒரு மறக்க முடியாத ஞாபகத்தை தமிழ் மக்களுக்கு கொடுத்த படம் குறிப்பாக தமிழ் மக்களின் மிக முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கொடைக்கானலில் குணா குகை என்ற சுற்றுலா தளம் மிகவும் வரவேற்பை பெற்ற இடம். ஆனால் கமலஹாசன் குணா திரைப்படத்தை அங்கு எடுப்பதற்கு முன்பு அந்த இடத்திற்கான பேரே வேறு என்பதை ஆணித்தரமாக கூறியதோடு 2008ல் நடந்த உண்மை சம்பவத்தையும் தத்துரூபமாக வெளிக்காட்டியது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்!

மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், ஶ்ரீநாத் பாசி ஆகியோர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கேரளாவின் மஞ்சுமல் என்ற இடத்திலிருந்து 9 இளைஞர்கள் குணா குகைக்குச் சென்று அங்கு தனது ஒரு நண்பரை குறிக்குள் விழுந்ததை பார்த்து பதறிப்போய் தனது நண்பரை மீட்பதற்காக மற்ற நண்பர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்துமே தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி குணா திரைப்படம் அங்கு எடுப்பதற்கு முன்பாக அந்த இடம் டெவில் கிச்சன் என்று அழைக்கப்பட்டதாகவும் பல உயிர்கள் அங்கு பரி போய் உள்ளதாகவும் அப்படத்தின் கூறப்பட்டது. இதனை அடுத்து குணா திரைப்படம் வெளியான பொழுது குணா புகையை பார்க்க மக்கள் எப்படி அலைமோதினார்களோ அதே போன்று இந்த திரைப்படத்திற்குப் பிறகும் குணா குகையை பார்ப்பதற்கு பல மக்கள் கொடைக்கானல் நோக்கி புறப்பட்டனர். மேலும் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 250 கோடியை வசூலித்தது. இருப்பினும் இப்படத்தின் தயாரிப்பாளர் தற்பொழுது வழக்குகளில் சிக்கி தவித்துள்ளார்.

அதாவது கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சிராஜ் என்பவர், மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்காக ரூபாய் 7 கோடியை முதலீடு செய்து இருந்தேன் படத்தின் தயாரிப்பாளர்கள் படம் வெளியான பிறகு படத்தின் லாபத்திலிருந்து 40 சதவீதம் தொகையை தனது பங்காக தருவதாக கூறினார்கள். அதற்காக நானும் காத்திருந்தேன் ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என மரடு காவல் நிலையத்தில் மஞ்சுமல் பாய் தயாரிப்பாளர்கள் மீது புகார் அளித்தார். இதனை அடுத்து இந்த புகாரை அமலாக்கத்துறை தற்போது கையில் எடுத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த வாரம் கொச்சியில் உள்ள அமலாக துறை அலுவலகத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. இவரைத் தொடர்ந்து இப்படத்தின் மற்ற தயாரிப்பாளர்களிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.