24 special

நம்ம பிரச்சனை இருக்கட்டும் மொத அத பாரு...! பயத்தில் பேசியுள்ள பினராயி விஜயன்....ஆட்டம் கண்டிருக்கும் கேரள அரசியல்!!

PINARAYI VIJAYAN, RAGHULGANDHI
PINARAYI VIJAYAN, RAGHULGANDHI

நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பிடித்து மீண்டும் மத்தியில் வெற்றியை பெற்றுள்ளது. இதனால் ஜவஹர்லால் நேரு, அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்கும் பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. இருப்பினும் பாஜக கடந்த தேர்தலில் 33 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது, ஆனால் அதுவே இந்த முறை 293 இடங்களாக குறைந்துள்ளது. பாஜகவின் வெற்றி தொகுதிகள் குறைந்திருப்பதே எங்களது முதல் வெற்றி என காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி மறுபக்கம் சந்தோஷ குஷியில் ஆடி வருகிறது. ஆனாலும் அருணாச்சலப் பிரதேசம்,  ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் சிக்கிமை தவிர மற்ற மூன்றிலுமே பாஜக தான் ஆட்சியைப் பிடித்துள்ளது.


அதுமட்டுமின்றி கேரளாவில்  இதுவரை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் என இரண்டு கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த போட்டியை மாற்றி மூன்றாவது கட்சியாக அங்கு உருவெடுத்ததோடு ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளது பாஜக! இதனால் இந்நாள் வரை கேரளாவில் நிலவி வந்த வரலாற்றை பாஜக முதல் வெற்றியை கொண்டு மாற்ற தொடங்கி உள்ளது என்ற பேச்சு கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அக்கூட்ட தொடரின் இரண்டாவது நாளில் நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் சிபிஎம் கூட்டணி தோல்வி அடைந்ததற்கான பொறுப்பை முதல்வர் பினராயி விஜயன் ஏற்று ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது. இதற்கு பினராய் விஜயன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது தேர்தல் தோல்விக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு யாரும் வரவேண்டாம். ஏனென்றால் 1980ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் தலைமையினான அதிமுக தோல்வியடைந்தது ஆனால் அதற்கு அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றியைக் கண்டது. அதேபோன்று 2019 தேர்தலின் பொழுது காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது ஆனால் அதற்குப் பிறகு வந்த சட்டசபை தேர்தலில் சிபிஎம் கூட்டணி வெற்றியை கண்டதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! எந்த அடிப்படையில் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்! 2004 இல் காங்கிரஸ் முதல்வராக இருந்த ஏ கே ஆண்டனி கூட ராஜினாமா செய்தது தேர்தல் சீட்டு குறைந்ததற்காக அல்ல காங்கிரஸில் அமைப்பு ரீதியாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர் ராஜினாமா செய்தார். மக்கள் தற்போது சிபிஎம் கூட்டணிக்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக சிபிஎம் கூட்டணிக்கு எதிராக மக்கள் செயல்பட்டார்கள் என நினைக்க வேண்டாம் மோடிக்கு மாறாக ஒரு கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் கூட்டணியை மோடிக்கு மாறாக நினைத்துள்ளனர். 

அதோடு நீங்கள் வாங்கி இருக்கும் வாக்குகளும் அதன் மூலம் பெற்ற வெற்றிகளுமே தற்காலிகமானது தான், அதில் எங்களுக்கு எந்த வேதனையும் இல்லை. ஆனால் பாஜக வென்றது தான் வேதனையாக உள்ளது என பேசி இருந்தார். மேலும் எந்த தொகுதிகளில் நீங்கள் தோல்வியை பெற்றீர்கள் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராய்ந்து பாருங்கள் அதை விட்டுவிட்டு சிபிஎம் கட்சியை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்ற வகையில் பினராயி விஜயன் பேசியுள்ளார். இப்படி கேரளாவில் ஒரே ஒரு தொகுதியில் பாஜக தனது வெற்றியை பதிவு செய்து ஒட்டுமொத்த கேரள அரசியலை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் சிபிஎம் கட்சிகள் கூட நம்ம சண்டையை விடு மொத பாஜக வெற்றி பெற்றிடுச்சு, அத பாரு என்ற வகையில் பேசி உள்ளது தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.