24 special

கோயம்புத்தூர்ல இந்த கடையை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க..... பொளந்து கட்டிய கோயம்புத்தூர் பெண்!!

PAROTTA
PAROTTA

சமூக வலைதளத்திற்குள் சென்றாலே பல விமர்சனங்கள் பாடல்கள் நடன வீடியோக்கள் கருத்து கூறும் வீடியோக்கள் திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்கள் என பலவிதமான வீடியோக்கள் பதிவிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களும் எந்தவித தடைகளும் இன்றி பதிவிடுகிறார்கள் தங்களுக்கு இருக்கும் நடன திறமை, பாட்டு திறமை, கவிதை திறமை, பேச்சு திறமை என மற்ற அனைத்து திறமைகளையும் வெளி காட்டி வருகின்றனர். ஆனால் முன்பெல்லாம் சில கிராமங்களில் பெண்கள் படிப்பதற்கே தடையாக இருந்தது வெளியில் செல்வதற்கு தடை சத்தம் போட்டு சிரிப்பதற்கு தடை என ஒவ்வொன்றிற்கும் பல தடைகள் இருந்தது அதற்குப் பிறகு பல போராட்டங்கள் சமூக வளர்ச்சி மற்றும் வளர்ந்த கண்ணோட்டம் பெண்களை மற்ற இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க உதவியது.


சிறிதளவு படிப்பை பெற்றவுடன் தனக்கான எதிர்காலத்தையும் தனக்கு எது சரி என்பதையும் திறம்பட முடிவு செய்யும் திறனை பெற்றனர் பெண்கள் பல உயரங்களைத் தொட்டனர், பல கனவுகளை அடைந்தனர் இப்படிப்பட்ட கனவுகளில் திரை வாழ்க்கையும் தற்போது பல பெண்களின் முக்கிய கனவாக உள்ளது அதற்காக இன்றைய சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.திரை வாழ்கையில் நுழைவதற்காக மட்டுமல்லாமல் தனது விருப்பத்தின் பெயரிலும் பலர் பல வீடியோக்களை பேசி பதிவிடுகிறார்கள் சில நேரங்களில் பல மில்லியன் பார்வையாளர்களையும் தொட்டுவிடுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மின்சார கட்டணம் என்பது மிக அதிக உச்சத்தை தொட்டுக்கொண்டு செல்கிறது என்பதை மையப்படுத்தி பல பெண்கள் காமெடியாக வீடியோ எடுத்து பதிவிட்டு வந்தனர்.

அந்த வரிசையில் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு பெண் மிகவும் கோபமாகவும் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். அதாவது அந்த வீடியோவில் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை வந்து விட்டது வெயிலும் உச்சபட்சமாக அடிக்கிறது.வெளியிலில் அவர்களை கூட்டிச் செல்ல முடியவில்லை. அதனால் வீட்டிற்குள் இருந்தாலும் வெயில் தாக்கம் தாங்க முடியவில்லை என ஒரே ஒரு ஏசி வாங்கி மாட்டினோம் அதற்கு இவ்வளவு பில்லா இந்த பில்ல பார்த்தா ஏசி வாங்கி மாட்டுனதுக்கு பதிலா எங்க பிள்ளைகளை நாங்க வெளியவே கூட்டிட்டு போயி நாலு இடத்த காமிச்சு இருப்போமே, அப்படி நாலு நாள் சுத்திட்டு வந்து நாலு நாளுமே வெளியே சாப்பிட்டா கூட இவ்ளோ காசு வந்து இருக்காது என மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளுமே நியாயம் தான்! உண்மைதான்! என பல கமெண்ட்கள் முன்வைக்க பலரை தூண்டியது. இந்த நிலையில் அதே பெண் மீண்டும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில், ஒரு குறிப்பிட்ட ரெஸ்டாரன்ட்டின் பெயரை கூறி இங்கிருந்து ஜுன் ஆறாம் தேதி இரவு யாரு முட்டை புரோட்டா போட்டார்கள் என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும் புரோட்டாவிற்கு தேங்காய் சட்னி கொடுத்திருக்கிறீர்கள், முட்டை புரோட்டா என்ன அப்படி இருக்கு நான் இதுவரைக்கும் அப்படி ஒரு புரோட்டாவ சாப்பிட்டதே இல்லை என்ன கடை நடத்துறீங்க என்று அந்த கடையை திட்டுவது போன்று தனது வீடியோவை ஆரம்பித்த அந்த பெண் ஒரு கட்டத்தில் இது திட்டுவதற்கான வீடியோ அல்ல உண்மையில் அந்த கடையிலிருந்து வந்து முட்டை பரோட்டாவும் பரோட்டாவும் மிகவும் அருமையாக இருந்தது. அந்த முட்டை பரோட்டாவை போட்ட ஹோட்டல் மாஸ்டருக்கு தங்க மோதிரமே கடை உரிமையாளர் போட வேண்டும் யாரேனும் நல்ல முட்டை பரோட்டா மற்றும் பரோட்டா சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக இந்த கடைக்கு நீங்கள் செல்லுங்கள் என்று அந்த கடையின் பெயரை மீண்டும் கூறி சிறுவயதில் எனது தந்தை வாங்கி கொடுத்தது போன்று மிகவும் அருமையாக இருந்தது என அக்கடையை பாராட்டி பேசி உள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.