அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடுத்த ஹேபியஸ் கார்பஸ் மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது செந்தில்பாலாஜிம னைவி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மீண்டும் சில நிமிடங்கள் வாதட அனுமதிக்க வேண்டும் என கேட்டார் .அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனு மீது தன் வாதங்களை வைத்தார். அதன் பிறகு காணொலி காட்சியில் அமலாக்கத்துறை வழக்கறிஞரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை அதிரடியாக தொடங்கினர்.
ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும்போது, உயர்நீதிமன்றம் ஹேபியஸ் கார்பஸ் உத்தரவை பிறப்பிக்க முடியுமா சட்டத்தில் இடமிருக்கிறதா?செந்தில்பாலாஜி ஜாமீனுக்கு செஷன்ஸ் கோர்ட்டில் விண்ணப்பித்தார் அப்போது என்ன காரணங்களை குறிப்பிட்டாரோ தற்போது ஆட்கொணர்வு மனுவிலும் அதே காரணத்தை கூறி இருக்கிறார் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் மனு எப்போது தாக்கல் செய்ய முடியும்? சட்ட விரோதக் காவலில் இருப்பதாக நினைக்கும் ஒருவர் எப்படி நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியும்? செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்ததிலேயே அவர் சட்ட ரீதியான காவலில் இருப்பதை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதி செய்து இருக்கிறது.ஒருவர் சட்டவிரோத காவலில் இருப்பதாக நம்பினால், அவர் ஏன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும்?” என்ற வாதத்தை மேத்தா நீதிமன்றத்தில் வைக்க செந்தில் பாலாஜி தரப்பு முகம் வாடியது,
மேலும் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்த தேதியும் நேரமும் சர்ச்சைக்குரியதாக இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 1:39 மணிக்கு செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பம் ஜூன் 14 ஆம் தேதி காலை 11:30 முதல் 12 மணிக்குள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட பத்து மணி நேரத்துக்குள் அவரது கைது பற்றிய தகவலை நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளோம் இதில் எங்கே சட்ட விதி மீறல் நடந்து இருக்கிறது.
இதன் பிறகு அமலாக்கதுறை வழக்கறிஞர் வைத்த வாதம் தான் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.இடத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவு 19 ஐ நான் குறிப்பிட விரும்புகிறேன் என கூறி அதை நீதிமன்றத்தில் துசார் மேத்தா படித்து காட்டினார் அதாவது, ‘பிஎம் எல் ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தில் ஒரு நபர் குற்றவாளி என்று நம்புவதற்கு காரணம் இருந்தால், அவரைக் கைது செய்ய ED அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை உடனடியாகத் தெரிவிக்காமல், கூடிய விரைவில் தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த பிரிவு கூறுகிறது.பிஎம்எல்ஏ பிரிவு 19 என்பது ஒரு நபரைக் கைது செய்யும் போது விசாரணை அதிகாரிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றது. இதன்படி விசாரணை அலுவலர்( கைது செய்வதற்கான காரணங்கள் இருப்பதைத் திருப்திப்படுத்த ஒரு சீல் வைக்கப்பட்ட கவரில் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்”
“இப்போது பிஎம்எல்ஏவின் பிரிவு 65 ஐ பாருங்கள். சிஆர்பிசியின் விதிகள் பிஎம்எல்ஏவின் விதிகளுக்கு முரணாக இல்லாததால் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்குப் பொருந்தும். மேலும் பிஎம்எல்ஏவின் 71-வது பிரிவையும் படித்துப் பாருங்கள்.PMLA சட்டத்தில் மிகவும் கடுமையான விதிகளின் கீழ் நாங்கள் செயல்படுகிறோம்.
அந்த அடிப்படையில் செந்தில்பாலாஜியை கைது செய்வதற்கான போதுமான திருப்திகரமான காரணங்கள் இருப்பதை உறுதி செய்து விசாரணை அதிகாரி சீலிடப்பட்ட கவரில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.அந்த கவர் விசாரணையின் போது திறக்கப்படும்” என்று வாதிட்டார் துஷார் மேத்தா.
தொடர்ந்த அவர், “ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 1:39 மணிக்கு கைது செய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவர் பெற மறுத்துவிட்டதாகவும், ஒப்புதலில் கையெழுத்திட மறுத்துவிட்டார், மேலும் அவரது தம்பியின் தொலைபேசி எண்ணிற்கு நாங்கள் அனுப்பிய மெசேஜ் நகலை இங்கு சமர்ப்பிக்கிறோம் என ஆதாரத்தை எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் மேத்தா.
கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் முடிவதற்கு முன்பே, அதாவது ஜூன் 14 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற செஷன்ஸ் நீதிபதியால் கைது செய்யப்பட்டதற்கான காரணம் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது சட்ட விரோதமான கைது அல்ல” என்று வாதிட்டார் துஷார் மேத்தா.இப்படி இருக்கையில் ஏன் செந்தில் பாலாஜி கஸ்டடி ஆணையை எதிர்த்து அமைச்சர் இதுவரை ஏன் மனு செய்யவில்லை?” என்று கேட்டார் துஷார் மேத்தா.
இதனால் செந்தில் பாலாஜி மனுவில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கொண்டுவந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவ்வாறு செய்யபட்டால் செந்தில் பாலாஜி தற்போது இருக்கும் அனைத்து சட்ட பாதுகாப்பில் இருந்து நீக்கப்பட்டு செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இன்றைய வழக்கு விசாரணை முலம் தெரியவந்து இருக்கிறது.