24 special

தேவர்மகன் சர்ச்சை...! கமல்ஹாசனை வருத்தெடுத்த பேரரசு..!

Kamalhasan,perarasu
Kamalhasan,perarasu

தமிழ் சினிமாவின் நடிகரும் தமிழகத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகும் படம் மாமன்னன், இதை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது, இந்த நிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கமல் அவர் இருக்கும் பொழுது இயக்குனர் மாரி செல்வராஜ் மேடையில் தேவர் மகன் படத்தை பற்றி கூறியது பெரும் சர்ச்சையாக எழுந்தது.


அதாவது தேவர் மகன் படம் தனக்கு மிகவும் வலியை கொடுத்ததாகவும் அதில் எது சரி எது தவறு என்பதை யோசிக்கும் வகையில் இருந்ததாகவும் இருப்பினும் அந்த படம் எனக்கு மிகுந்த மன தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தை பற்றி கூறியிருந்தார். இந்த விழாவில் இப்படி கூறிய இயக்குனர் மாரி செல்வராஜ் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் கமல் அவர்களுக்கு தேவர் மகன் பற்றி எழுதிய கடிதம்தான் சர்ச்சையை எழுப்பியது, அதாவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தூக்கி பிடிப்பதாக கமல் மீது இயக்குனர் மாரி செல்வராஜ் குறுப்பிட்டிருந்தார். இந்த கடிதம் மீண்டும் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் சமூக வலைதளங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும், கமலஹாசனின் ரசிகர்களும் மாரி செல்வராஜை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். தேவர் மகன் படம் பற்றி அவர் கூறிய விமர்சனத்தையும் கடுமையாக எதிர்த்து அவரை ட்ரோல் செய்து வந்தனர். விஷயம் விபரீதம் ஆனதற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் பற்றி தன் கூறிய கருத்திற்கு விளக்கம் அளித்து ஜகா வாங்கினார்! அதாவது நான் யாரிடம் என்னுடைய கருத்தை கூறினேன் கலையைப் பற்றி மிகுந்த தெளிவுடையவரிடம்,  நான் கூறியதை அவர் புரிந்து கொண்டார் அதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும் எனக்கும் அவருக்கும் இடையே இருப்பது அப்பா பையன் இடையே இருக்கும் சண்டை போல் தான். என்னவென்று தெரியாமல் தந்தையை கோபித்துக் கொண்ட மகன் மறுபடியும் தந்தையிடம் வரும் பொழுது அவர் ஆழ தழுவுவது இல்லையா அதே போன்று நான் இதை பார்க்கிறேன் என்று மாரி செல்வராஜ் சரண்டராகி விளக்கத்தை அளித்தார்!

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு இயக்குனர் மாரி செல்வராஜ் கூறிய விமர்சனத்திற்கு கமலஹாசனின் பதில் அளிக்காமல் அமைதி காத்ததை பற்றி விமர்சனம் செய்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனை மாரி செல்வராஜ் வசை பாடிவிட்டார் அதற்கான எதிர் கோப வீச்சுகள் தற்போது வலம் வருகிறது இருப்பினும் கமலஹாசன் மாரி செல்வராஜின் கருத்திற்கு வருத்தமடைந்ததாகவும் தெரியவில்லை அதற்காக அவர் பதிலை கொடுக்கவும் இல்லை, மாறாக மாரி செல்வராஜை உயர்த்தபடியே மேடையில் பேசினார். ஒருவேளை அது அவருடைய பக்குவமாக இருக்கலாம் ஆனால் தான் நடித்த ஒரு படைப்பை தமிழகமே கொண்டாடியுள்ள நிலையில் அதைப்பற்றி ஒருவர் குறை சொல்லும் பொழுது அதற்கான பதிலை அவர் கொடுக்க வேண்டியது ஒரு நல்ல கலைஞனின் கடமை, அதை செய்யாமல் அவர் ஒரு கலைஞனாக இல்லாமல் அரசியல்வாதியாக அந்த சமயத்தில் கமலஹாசன் இருந்து விட்டார். அரசியல் ஆதாயத்திற்காகவும் சினிமா வியாபாரத்திற்காகவும் கமலஹாசன் தன் வாயை மூடி இருந்து விட்டார் என்று இயக்குனர் பேரரசு கமலஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.