பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் இதுவரை எந்த விதமான விமர்சனங்களையும் பாஜக முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.இந்த சூழயில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விரைவில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அண்ணாமலை டெல்லி தலைமையிடம் விளக்கம் கொடுக்க இருக்கிறார்.இதற்காக தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளிலும் தனியார் ஏஜென்சிஸ் மூலம் நடத்திய கருத்து கணிப்பு மேலும் இதுவரை என் மண் என் மக்கள் யாத்திரை நடந்த தொகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் அத்துடன் தொகுதியில் செல்வாக்கான வேட்பாளர்கள் என அனைத்து பட்டியலும் தயாராக இருக்கிறதாம்இவை நேரடியாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா கவனத்திற்கு சென்று இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.இதில் மிக முக்கியமாக தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் தனியார் ஏஜென்சிஸ் எடுத்த சர்வேயில் 10 தொகுதிகளில் பாஜக கூட்டணி அதிமுக கூட்டணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளும் எனவும் குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கான வாக்கு வங்கி முழுவதும் குறைந்து இருப்பதும் தெரியவந்து இருக்கிறது.
இந்த சர்வே முடிவுகளை அடிப்படையாக கொண்டு தேர்தல் கூட்டணியை உறுதி செய்யவும், இப்போதே பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளை அடையாளம் காணவும் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களாக யாரை களம் இறக்கினால் வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஆலோசனை நடத்த அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்து இருக்கிறதாம்.பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினால் சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா என்று ஈபிஎஸ் தரப்பு சர்வே எடுத்ததில் சொற்ப வாக்குகளே அதிமுக கூட்டணிக்கு வரும் எனவும் இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பாஜக கூட்டணி பல இடங்களில் தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளும் என முடிவுகள் வந்து இருக்கிறதாம்.இதையடுத்து ஈபிஎஸ் தரப்பு பாஜக அதிமுக கூட்டணி பிரிந்தது திமுகவிற்கு சாதகம் என தங்களுக்கு தெரிந்த யூடூப்பர்ஸ் மற்றும் முக்கிய பத்திரிகையாளர்கள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வீடியோக்கள் போட முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.பாஜக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள டெல்லி தலைமையும் பச்சை கொடி காட்டிய நிலையில் தேவையில்லாமல் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவின் உண்மையான பலம் என்ன என அறிய நாமே உதவி விட்டோம் என எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.