தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது அவரது 42வது படமான "கங்குவா" படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். சூர்யா என்றாலே ஞாபகத்துக்கு வருவது "ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்றா" என்ற வசனம் தான் அடுத்ததாக ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தும் இவர் கங்குவா படத்தின் கதையானது நிகழ்காலம் மற்றும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கபடுகிறது. இந்த படத்திற்காக சூர்யா பழைய படி உடம்பை மிகேற்றும் வீடியோ சமூக தளத்தில் வெளியானது. மேலும், இந்த படம் 10 மொழிகளில் வெளியிடவும், அடுத்த ஆண்டு தொடக்கத்திலியே படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு அதற்கான பணிகளை மும்பரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது,இந்த படத்தில் சூர்யாவின் தோற்றத்தை பார்க்கும்போது ஆதிகாலத்தில் மனிதன் விலங்குகளின் எச்சத்தை எப்படி பயன்படுத்திருப்பார்கள் என்பது போல் தோற்றம் பயங்கரமாக இருந்தது.
இந்த படத்தின் வெற்றி மூலமாக தான் இருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தி கொடுக்கும், சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி விமர்சனங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை என ரசிகர்கள் தெரிவித்தனர், மறு பக்கம் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து அண்ணாத்த படத்தை இயக்கிருந்தார். இந்த படம் படும் தோல்வியடைந்து பல விமர்சனங்களை பெற்றது. எனவே கங்குவா படம் மூலம் இருவரும் கம்பேக் கொடுப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் கிலிப்ஸ் வீடியோவை வெளியீட்டு நல்ல வரவேற்பு மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது, சமீப நாட்களுக்கு முன் ஆந்திராவின் ராஜமுந்திரி காடுகளில் ஆக்ஷன் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிலிப்ஸ் விடியோவிற்கு பிறகு எந்த அப்டேட்டையும் கொடுக்காமல் படத்தில் முழு கவனம் செலுத்தி வந்த படக்குழு தற்போது, புதிய அப்டேட் ஒன்றை சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
அதாவது சென்னை EVP பிலிம்ஸ் சிட்டியில் செட் அமைத்து அதில் சண்டை காட்சிகளுக்காக முதலை ஒன்றுடன் சூர்யா மோதுவது போல் படமாக்கி வருவதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து கங்குவா படக்குழுவினர் தாய்லாந்து சென்று அங்கு நிஜ விலங்குகளுடன் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல் கசிந்தன. அங்கு நிஜ புலியுடன் நடிகர் சூர்யா பழகி வறராம் என்னதான் இருந்தாலும் புலியடன் மோதுவது கொஞ்சம் திடுக்கிடும் என்று தான் இருக்கும் அப்படி இருக்க சூர்யா அதையெல்லாம் மறந்து விட்டு இயக்குனர் சொல்வதை எல்லாம் செய்து வருகிறார். இந்த கால கட்டத்தில் டெக்னாலஜி தொழிநுட்பம் எவ்வளவோ வளர்ந்து இருக்கின்றன. அந்த வகையில் இப்போது போய் நிஜ விலங்குடன் பயிற்சி எடுப்பது பிரமிக்க வைக்கிறது. சூர்யாவுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான தாயை காத்த தனயன் என்ற படத்தில் புலியுடன் சண்டை போட்டு இருப்பார். இதே போல் கங்குவா படமும் இருக்க எம்ஜிஆர்-ரை ரோல் மாடலாக வைத்து கங்குவா படக்குழுவினர் சூர்யாவை புதில்லையா முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம். எது எப்படியோ படத்தினை பார்த்தால் தான் தெரியவரும் படத்தில் எந்த அளவிற்கு உழைப்பு இருக்கிறது என ஒரு பக்கம் பேச்சு எழத் தொடங்கியுள்ளது.