24 special

மேலும் வினையை தேடி கொண்ட திமுக அரசு...! இது தேவையா....?

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

விருதுநகரில் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே உள்ள கிழக்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் 5 அடி உயரத்தில் பாரத மாதா சிலை வைக்கப்பட்டது.. இந்த சிலையை பாஜகவினர் வைக்க யாரிடமும் அனுமதி பெறவில்லை என காரணத்தை கூறி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பாஜக அலுவலகம் சென்று சிலையை அகற்றும்படி நிர்வாகிகளிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் பாரத மாதா சிலையின் மீது துணி சுற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் மறைத்தனர். அதன்பிறகு அந்த சிலையை வருவாய்த்துறையினர் அகற்றி அங்கிருந்து எடுத்து சென்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவோடு இரவாக இந்த சம்பவம் நடந்தது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதமாதா சிலையை வைப்பதற்கு அதுவும் பாஜக அலுவலகத்தில் வைப்பதற்கு ஏன் அனுமதி வாங்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.


இந்த நிலையில் விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், 'விருதுநகர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது. ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பாரத அன்னையின் புகழ் ஓங்குக' என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதை கண்டித்து இன்று நடை பயணத்தில் கருப்பு பேட்ச் அணிந்து நடைபயணம் மேற்கொள்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மேலும் பாரதமாதா சிலை அகற்றப்பட்டது தமிழக பாஜக சும்மா விடப்போவதில்லை எனவும் பாஜக அலுவலகம் என்றாலே அங்கு ஒரு அடையாளமாக பாரத மாதா சிலை இருக்கும் பாரத மாதா தான் நாட்டின் தெய்வம் என்கின்ற ரீதியில் பாஜக பார்த்து வருகிறது, ஆனால் திமுக அரசு இத்தனை நாள் வரையில் அவதூறு பரப்புகிறார்கள் போலி செய்தி உருவாக்குகிறார்கள் எனக் கூறி சில வழக்குகளை தொடுத்து தமிழக பாஜகவில் சிலரை கைது செய்துள்ளார்கள், ஆனால் தற்பொழுது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்படி பாரதமாதா சிலையை அகற்றி திமுக தேவையில்லாமல் வினையை தேடிக் கொண்டது இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை என பாஜகவில் சிலர் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். 

மேலும் தற்பொழுது இருக்கும் நிலையில் திமுக அரசு மக்கள் மத்தியில் பின்னடைவை கவனிக்காமல் அதையெல்லாம் சரி செய்யாத நிலையில் பாரத மாதா சிலை வைத்ததா அவர்களுக்கு தப்பா தெரிகிறது என பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருக்கும் பிரச்சினைகள் போதாது என பாரதமாதா சிலை மீது கை வைத்து திமுக அரசு தற்போது மேலும் வினையை தேடிக் கொண்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த விவகாரத்தை டெல்லி வரை அண்ணாமலை கண்டிப்பாக கொண்டு செல்வார் எனவும் பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர்.