24 special

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வேட்டு!.....ஓபிஎஸ் செய்த தரமான செய்கை!

edapadi, ops
edapadi, ops

சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வதை நீக்கக்கோரி சட்டசபையில் இருந்து வெளியேறினார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றத்தில் ஒரு பெரிய வழக்கை தொடர்ந்துள்ளனர். தமிழக எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக்கோரியும், அவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளருமான  ஏ.சுப்புரத்தினம் கோவாரண்டோ வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவில் அவர் கூறியிருப்பது: "2021ல் நடந்த தேர்தலில் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். வேட்பு மனுவில் தனது மனைவி ராதாவின் சொத்து கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.அவரது மனைவி பங்குதாரராக இருந்த பாலாஜி புளூ மெட்டல் நிறுவனத்தின் மூலம் அவருக்கு ரூ.69 லட்சத்து 36,333 வருமானம் வந்துள்ளது. அதை மறைத்துவிட்டார்.  அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு நெடுங்குளம் கிராமத்தில் பல்வேறு சர்வே எண்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் அவர் தனது வேட்புமனுவில் தனக்கு 13 நிலங்கள்தான் உள்ளன என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு சொந்தமான மேலும் 6 நிலங்கள் குறித்த தகவல்களை வேட்புமனுவில் மறைத்துவிட்டார்.எடப்பாடி பழனிசாமியின் மனைவி ஹரிஷ் கிருபா, பாலாஜி புளூ மெட்டல் என்ற இரு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்ததையும் அதன் மூலம் கிடைத்த வருமானத்தையும் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை.

அவர் தான் படித்த இளநிலை படிப்பில் (முடிக்கவில்லை) எந்த பிரிவில் படித்தார் என்பதையும் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. அவரது மனைவியின் பெயரில் எடப்பாடி தாலுகா சின்ன மணலி கிராமத்தில் 4200 சதுர அடி நிலமும், சேலம் தெற்கு தாலுகா தடாகபட்டி கிராமத்தில் 560 சதுர அடி நிலமும் உள்ளன. இதன் சந்தை மதிப்பை சரியாக தெரிவிக்கவில்லைஅவரது மனைவிக்கு சொந்தமாக ரூ.2 கோடியே 90 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு நெடுங்குளம் கிராமத்தில் 7 ஹெக்டேர் நிலம் உள்ளது. அதன் சந்தை மதிப்பை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. கடந்த 2016-17 முதல் 2018-19வரை அவரது வருமானத்தை வேட்புமனுவில் தவறாக குறிப்பிட்டுள்ளார். அவரது வேட்புமனுவை உரிய முறையில் ஆய்வு செய்யாமல் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்களை தந்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார்.

சேலம் மாநகர போலீஸ் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 2021ல் பதிவு செய்து சேலம் 1வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் வேட்பு மனுவில் அவர் குறிப்பிடவில்லை. அதை உரிய முறையில் பரிசீலனை செய்யாமல் அவரை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. எனவே, எந்த தகுதியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார் என்று விளக்கம் கேட்குமாறு உத்தரவிட வேண்டும். எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் எம்எல்ஏவாக இருந்த நாட்களில் அவர் பெற்ற சம்பளம் மற்றும் அலவன்ஸ் ஆகியவற்றை திரும்ப வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசரணைக்கு வரவுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது. இந்த சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகள் கூறி வருகிறார்களாம். ஏற்கனவே இரட்டை இழை சின்னம் இன்னும் உறுதியாக ஒரு பக்கம் செல்லாமல் இருப்பதால் இதற்கு மேல் தான் எடப்பாடி பெரும் பிரச்சனைகளை சந்திக்க போகிறார் என்று ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.