24 special

பேனா சிலைக்கு அனுமதி கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக...!

Pm modi,mk stalin
Pm modi,mk stalin

தமிழகத்தில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் திமுக அரசை மேலும் ஒரு கடும் சிக்கலில் மாட்டிவைத்துள்ளது மத்திய அரசு!முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவில் பேனா சின்னம் அமைக்க திமுக அரசால் கடந்த ஆண்டு முன்மொழிக்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மீனவர்கள் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்றவை எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


கடலுக்கு நடுவில் அவ்வளவு பெரிய பேனா சிலை எதற்காக இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். கடலுக்கு நடுவில் சிலை அமைப்பதுடன் கடற்கரையிலிருந்து பேனா சிலைக்கு செல்வதற்கு நீண்ட பாலம் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்துள்ளதாக திமுக அரசு கூறியது. இந்த நினைவுச் சின்னம் காலப்போக்கில் சென்னையின் அடையாளமாக மாறும் மேலும் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையின் பிரதிநிதித்துவத்தை இது பிரதிபலிக்கும் என்று பல கருத்துக்கள் திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டது. 

பேனா சிலை அமைப்பதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி கோரியது திமுக அரசு. அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டில் தமிழக அரசால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பேனா சிலை நிறுவுவதற்கு அருகில் அல்லது அந்த சிலை அமைக்கப்படும் இடத்தை சுற்றிலும் பவளப்பாறைகள், கடல் புல், ஆலிவ் ரிட்லி ஆமைகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கடல் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இல்லை, சிலை அமைப்பதற்காக நீர் மற்றும் வண்டல் தரம் உகந்ததாக உள்ளதாகவும் கடலுக்கு மேலேயும் கடலுக்குள்ளும் பிளாஸ்டிக் பைகள் அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் கடலின் அடிப்பகுதி சுத்தமாக உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் அப்பகுதி மீனவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் இதனை கடுமையாக எதிர்த்தனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலுக்குள் பேனா நினைவுச் சிலையை எழுப்புவதை அனுமதிக்க முடியாது, கடற்கரையில் புதைக்க விட்டதே தவறு பேனாசிலையை கட்டினால் அதை நான் ஒரு நாள் உடைப்பேன் என்று கடுமையாக எதிர்த்தார். 

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் பேனா நினைவு சிலையை அனுமதிக்க கூடாது  என்று பொதுநலன் வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பேனா சிலைக்கு ஏகபோக எதிர்ப்புகள் கிளம்பி கொண்டிருந்தது ஆனால் தற்போது பேனாசிலை கடலுக்குள் நிறுவுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் திமுக அரசு கலைஞரின் நினைவுச்சின்னமாக பேனா சிலையை நிறுவ ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த சிலை நிறுவப்படுவதற்கு பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர். முன்னதாக பேனாசிலையை வைத்தால் அதை நான் ஒரு நாள் உடைப்பேன் என்று சீமான் கூறியிருந்தார் மேலும் அதிமுக பேனா சிலையை நாங்கள் வைக்க விட மாட்டோம் என்றனர், அரசியல் விமர்சகர்களும் இதனை எதிர்க்கின்றனர் ஆனால் திமுக இதனை செய்தே தீர வேண்டும் இதனால் எதிர்ப்புகளும் கிளம்ப வேண்டும், என்று நினைத்து இந்த வேலைப்பாடுகளில் திமுக தொடங்க வேண்டும் என தற்போது மத்திய அரசு பேனா சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்கியதாகவே தெரிகிறது. 

இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேனா சிலையை  வைக்கவே கூடாது இவரை விட சிறந்த எழுத்தாளர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். பாரதிதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்றவரை விட இவர் சிறந்தவரா! எல்லாரும் பேனா வைத்து தான் எழுதினார்கள், பேனாவிற்கு சிலையை வைக்க கூடாது என்றும் ஆணித்தரமாக தனது எதிர்ப்பை தெரிவித்தார். இப்படி பேனா சிலைக்கு அனுமதி கொடுத்து திமுகவிற்கு எதிராக பாஜக போட்ட ஸ்கெட்ச் பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரணம் தற்பொழுது தமிழக மக்கள் திமுக அரசின் மேல் அதிருப்தியில் உள்ள சூழலில், மக்கள் நலத்திட்டங்களை கூட பணமில்லாமல் தமிழக அரசு இருக்கும் சூழலில் பேனா சிலை வைக்க முற்பட்டால் அது திமுக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் எனவே பேனா சிலை அனுமதி கொடுத்து அரசியல் விளையாட்டை அரமித்துள்ளது மத்திய அரசு என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.