24 special

உதயநிதிஸ்டாலினால் திமுகவிற்கு வந்த அடுத்த ஆப்பு...!

Udhayanidhi,annamalai
Udhayanidhi,annamalai

உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்தில் அமலாக்கதுறை ரைடு ஜாலியாக போகிறது என சொன்னாரோ அந்த செய்தி முடிவு அடைவதற்குள் அடுத்த ஆப்பு திமுகவிற்கு வந்து இருக்கிறது. இந்த முறை மேலும் இரண்டு அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலின் பேச்சை வைத்து மொத்தமாக களத்தை மாற்றி இருக்கிறது பாஜக.


மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி   பாஜக திமுகவை தொடர்ந்து எதிர்ப்பது திமுக நல்ல பாதையில் போய்க் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜகவை எதிர்க்கத்தான் செய்யும். எந்த காலத்திலும் பாஜக வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, உதயநிதி ஜாலியாக போய்க் கொண்டிருப்பதாக கூறினார்.

உதயநிதியின் இந்த பேச்சு சலசலப்பை உண்டாக்கியது, என்னடா இது செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை துன்புறுதியதால் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வழியே வந்து விட்டது என திமுகவினர் ஊடகங்களில் பேட்டி கொடுக்க உதயநிதியோ ஜாலியாக போய் கொண்டு இருக்கிறது என பேசி இருக்கிறாரே என மூத்த உடன் பிறப்புகளே ஆச்சர்யம் அடைந்தனர்.

உதயநிதி இப்படி பேசி சரியாக 24 மணி நேரம் தாண்டுவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது, தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் தங்களை சேர்த்து கொள்ளுமாறும் குறிப்பாக தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அரசு, அனிதா ராதாகிருஷ்ணனை காப்பாற்ற முயற்சி செய்யும் எனவே தங்களை வழக்கில் இணைத்து கொண்டால் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களை முன் வைக்க தயார் எனவும் எனவே எங்களையும் வழக்கில் சேர்த்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்க துறை கேட்டு இருக்கிறது.

தற்போது இந்த தகவல் எந்த அமைச்சர்கள் மீது எல்லாம் ஊழல் குற்றசாட்டு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறதோ அவர்களை எல்லாம் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.இந்த அதிர்ச்சி ஒரு புறம் என்றால் இன்று பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசிய காட்சிகளை சேகரித்து இருக்கிறது பாஜக.

ஸ்டாலின் தமிழில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசிய வார்த்தைகளை இந்தியில் சப் டைட்டில் போட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகும் நிலையில், பீகார் மக்கள் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி இப்படி நம் மாநில தொழிலாளர்களை தவறாக பேசிய ஒருவரைதான் எதிர் கட்சிகள் கூட்டணிக்கு அழைத்து சிறப்பு செய்து இருக்கிறீர்களா என கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.

இந்தியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை சப் டைட்டில் செய்து தமிழக பாஜகவினர் பீகார் வரை பரப்புவார்கள் என கனவிலும் திமுக நினைக்க வில்லையாம். உதயநிதி ஸ்டாலின் அமலாக்க துறை ரைடு ஜாலியாக போகிறது என பேசி ஒரு நாள் முடிவதற்குள் அனிதா ராதா கிருஷ்ணன் தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வரை ஆப்பு தேடி வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.