24 special

சதுரங்க வேட்டை பட பாணியில்.... தமிழ்நாட்டில் தொடரும் அவலம்! பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமா தமிழக அரசு?

sameer agamadhu
sameer agamadhu

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் மகன் சமீர்அகமது இவர் மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை நம்பிய கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தங்கள் சேமித்து வைத்த பணத்தை எல்லாம் சமீர்யிடம் பணத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு வட்டியுடன் கொடுத்த சமீர்அகமது நாளடைவில் பிரபலமானதும் மக்கள் அதிகளவிலான பணத்தை கொடுத்துள்ளனர்.


பணத் ஆசை யாரையும் விடாது என்பது போல் அதிக பணத்தை கண்ட சமீர்அகமது பணத்தை எல்லாம் சுருட்டி கொண்டு தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக சதுரங்க வேட்டை படத்தில் இப்படி தான் நடிகர் பொதுமக்களிடம் பணத்ஆசையை கூறி கோடி கணக்கில் பெற்றதும், எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார். அந்த படத்தை போல தமிழ்நாட்டில் உள்ள மனிதர்கள் இதனை ஆயுதமாக எடுத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற தொடங்கினர். மக்கள் இந்த காலகட்டத்திலும் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்து வருவது வழக்கமான செயலாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீர்அகமது இவர் உயர் ரக கார்களில் வலம் வருவது, 10க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள், 5க்கும் மேற்பட்ட உதவியாளர்களுடன் டீ குடிக்க புதுச்சேரி, டிபன் சாப்பிட சென்னை, மதிய உணவு சாப்பிட கோயம்புத்தூர் செல்வது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆடம்பரமாக இருந்துள்ளார்.

ஆரம்பத்தில் நிறுவனத்தை தொடுங்கும்போது ஏஜெண்டுகளுக்கு உயர் ரக பைக்குகள், ஆப்பிள் போன் போன்றவற்றை பரிசாக கொடுத்துள்ளார். பொறுமை இழந்த பொதுமக்கள் சமீர் அகமது சென்னையில் இருப்பதை அறிந்து அவரை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வந்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து தர்ம ஆதி கொடுத்துள்ளனர். தகவலறிந்து ஏமாற்றிய மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு சமீரிடம் சரமாரியாக அடித்து கேள்வியை கேட்டுள்ளனர். தா கணவர் கடத்தப்பட்டதை அறிந்த சாமியின் மனைவி கள்ளக்கஉறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் சமீரை மீட்டு தனியாக அளித்து சென்று விசாரித்தனர். விசாரணையில், எனக்கு நஷ்டம் ஏற்பட்டதால் தலைமறைவாகி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தேன்.

பின்னர் பொதுமக்கள் தொந்தரவு தாங்க முடியாமல் அந்த வீ்ட்டை காலி செய்து விட்டு உறவினர் வீட்டில் வசித்து வந்தபோது வாடிக்கையாளர்கள் என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து சமீர்அகமதுவை போலீசார் கைது செய்து சங்கராபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோா்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ஆதியான் உத்தரவிட்டார். இதையடுத்து சமீர்அகமதுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் சுமார் 3ஒக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அபபடுகுதியில் பரபரப்பு ஏற்பட்ட்டது. இதுபோல சம்பவம் பல இடங்களில் அரங்கேறியுள்ளது. இது குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.