24 special

விஜய் ரசிகர்களை கூல் செய்ய உதயநிதி செய்த காரியம் அவருக்கே வினையாக திரும்பியது...!

actor vijay, udhayanithi
actor vijay, udhayanithi

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் படம் 'லியோ', தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெறும் என விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரும் இந்த 'லியோ' படத்தின் வெளியீடு தற்பொழுது தலைப்பு செய்தியாக மாறி உள்ளது. காரணம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி ரத்து, பேனர்கள் வைக்க அனுமதி ரத்து, திரையரங்குகளில் குறிப்பிட்ட அளவுதான் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது போன்ற கெடுபிடிகள் இருக்கும் காரணத்தினால் இவை எல்லாவற்றிற்கும் பின்னணியில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு கொடுக்காததே இதன் பின்னணியில் இவ்வளவு அரசியல் இருக்கிறது என விஜய் ரசிகர்கள் தரப்பில் பேச்சுக்கள் எழுந்தது.


இது மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் வேறு குறிப்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு லியோ திரைப்படத்தை விற்கவில்லை, அதன் காரணமாகத்தான் இவ்வளவு குடைச்சல் லியோ படத்திற்கு கொடுக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் நாங்கள் சுதந்திரமாக படங்களை ஓட விட்டோம் இதுதான் அதிமுகவிற்கும்-திமுகவிற்கும் உள்ள வேறுபாடு' எனக் கூறியது வேறு சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி லியோ பட விவகாரத்தில் விதிக்கப்படும் நிபந்தனைகள், கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு இவை எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஆளும் திமுக தரப்பு இருக்கிறது என விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்து வரும் நிலையில் தேர்தல் வந்தால் இது கண்டிப்பாக எதிரொலிக்கும் எனவே இனி விஜய் ரசிகர்களிடம் எதற்கு வம்பு என ஆளும் திமுக தரப்பு சற்று தற்பொழுது அமைதியாக செல்ல முடிவெடுத்து இருப்பதாக சில தகவல்கள் கசிந்தன. 

இந்த நிலையில் உதயநிதி செய்த காரியம் ஒன்று அவருக்கே வினையாக திரும்பி உள்ளது, லியோ திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு நேற்று இரவு உதயநிதி லியோ திரைப்படத்தை பார்த்துள்ளார். 'லியோ' திரைப்படத்தை பார்த்துவிட்டு அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் தனது எக்ஸ் பக்கத்தில் 'லியோ திரைப்படம் சூப்பர்! விஜய் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டு அது மட்டுமல்லாமல் ஹேஷ்டேக் ஒன்றை பதிவிட்டு அதில் lcu எனக் குறிப்பிட்டுள்ளார். லியோ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, படப்பிடிப்பு நடந்து வந்ததிலிருந்து, வெளியாகும் இத்தனைநாள் வரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிறைய பேட்டிகள் கொடுத்திருப்பார், ஆனால் எந்த இடத்திலும் லியோ திரைப்படம் LCU  எனப்படும் கதைக்களத்தில் வருகிறதா என லியோ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவிக்காமல் இருந்தார்.

காரணம் LCU ஒரு தனிப்பட்ட கதைக்களம் அதில் லியோ திரைப்படம் வருகிறதா இல்லையா என்பது சஸ்பென்ஸ்! அது படத்தின் வெளியீடு அன்று தான் தெரிய வேண்டும் அது வரையில் அதைப் பற்றி தெரிய வைக்க கூடாது என படக் குழுவினர் அனைவரும் உறுதியாக இருந்தனர். ஆனால் படம் வெளியாகும் ஒரு நாள் முன்பே உதயநிதி ஸ்டாலின் லியோ திரைப்படம் எல் சி யு தான் வருகிறது என குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தது வேறு விஜய் ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது, விஜய் ரசிகர்களை கூல் செய்ய விஜய் நடித்த லியோ திரைப்படத்தை வாழ்த்தி ட்வீட் போடுகிறேன் என்கின்ற பெயரில் மீண்டும் வினையை இழுத்து வைத்து விட்டார் உதயநிதி என இப்பொழுது விமர்சனங்கள் அதிகமாக சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. ஏற்கனவே சனாதன விவகாரத்தில் வேறு உதயநிதி நீதிமன்றத்தில் நான் அமைச்சராக பேசவில்லை என்றது, தற்பொழுது விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்துகிறேன் என விஜய் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்தது என உதயநிதி எடுத்து வைக்கும் அடிகள் எல்லாம் திரும்ப இடிகளாக விழுகிறது என திமுகவினர் கவலையில் இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.