24 special

சூதானமா இருக்கனும் என்ற உளவுத்துறை ...! கவனிக்கப்பட்ட உடன்பிறப்புகள்...!

Annamalai,kn nehru
Annamalai,kn nehru

2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் பாஜகவினர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பல கூட்டங்களை நடத்தியுள்ள நிலையில் மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர்களும் பாட்னா, பெங்களூரு என பல்வேறு இடங்களில் கூட்டங்களை கூட்டி தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு பல  முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காகவே பாஜகவிற்கு எதிராக மணிப்பூர் விவகாரங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கிளப்பி வருகின்றனர் எதிர்க்கட்சியினர் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. 


இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தை வருகின்ற 28ஆம் தேதி தொடங்கவிருக்கிறார், உள்துறை அமைச்சர் இந்த நடை பயணத்தை தொடங்கி வைக்க இருப்பது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.. மேலும் நடை பயணத்திற்கான முயற்சிகள் பாஜகவினர் சார்பில் தீவிரமாக நடந்து வருகின்றன, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பாஜகவினர் படையெடுத்து வருகின்றனர்.

மேலும் நடைப்பயணம் எங்கு எப்போது தொடங்குகிறது மற்றும் எந்த ஊர்  வழியாக எந்தெந்த நாட்களில் செல்கிறது முதற்கொண்டு பக்காவாக பிளான் செய்திருப்பதாக பாஜக தரப்பில் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பான கவனிப்பு வழங்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார், 

இதற்கிடையில் அண்ணாமலை நடை பயணத்தில் கலந்து கொள்ளும் அனைவரையும் சிறப்பாக கவனிக்க போகிறார் என்பதை தெரிந்த திமுகவினர் திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் திமுக இன்ப அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்கனவே தனது மாவட்ட செயலாளர் களுக்கு நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம் அல்லது அதற்கு முன்பாகவும் வரலாம் என்று அறிவித்த நிலையில்  வாக்குச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் திருச்சியில்  நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து  வாக்குச்சாவடி செயலாளர்களுக்கும் சிறப்பான விருந்து வைத்து கவனிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்போது சிறப்பாக அவர்களை கவனித்து தான் தேர்தல் நேரத்தில் தீவிரமாக வேலை செய்வார்கள் என்பதற்காகவே திமுக இந்த விருந்து ஏற்பாட்டை ஏற்பாடு செய்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில்  திமுகவின் முக்கிய அமைச்சர்களான கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலினை வரவேற்ற நிலையில் 12000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தப் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்தான 5000 கிலோ அரிசி மற்றும் 6000 கிலோ மட்டன்மற்றும் 4000 கிலோ சிக்கன் முட்டை சாதம் என தடபுடலாக விருந்து வைத்துள்ளதாக தெரிகிறது.

இதன் பின்னணி என்னவென்று விசாரித்தபோது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியினரை சிறப்பாக கவனித்து வரும் நிலையில் உளவுத்துறை அறிக்கையும் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகுகிறது என ரிப்போர்ட் கொடுத்த நிலையில் திமுகவும் கட்சியில் கள அளவில் பணியாற்றும் பூத் ஏஜெண்டை நன்றாக கவனித்தால் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அது நமக்கு பயன்படும், இல்லையேல் வரும் தேர்தலில் பின்னடைவு என உணர்ந்து இந்த தடபுடல் விருந்தை ஏற்பாடு செய்து உடன்பிறப்புகளை திருச்சி மாவட்ட திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.