தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணத்தை தொடங்கியதிலிருந்து இன்று வரை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் இந்த நடை பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது நடை பயணத்திற்கு சிறப்பு சேர்த்து என்று கூறலாம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தின் இறுதியில் ஒரு கோடி பேர் கலந்து கொண்டதற்கான அத்தாட்சியை பெருமளவில் அனைவரிடமிருந்தும் கையெழுத்து வாங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ஏற்கனவே பாஜகவினருக்கு அறிவுறுத்தி இருந்தார் மேலும் அதற்கான செயல்களில் பாஜகவினர் தீவிரமாக இறங்கிய நிலையில் அண்ணாமலை ஒவ்வொரு மாவட்டங்களின் தொகுதி வழியாக செல்லும் போதும் மக்களின் வரவேற்பு அதிகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அலைமோதிய கூட்டத்தில் அண்ணாமலை நடந்து வந்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது
இவ்வாறு அண்ணாமலையின் நடைப்பயணத்தை ஆரம்பித்த நாளே மக்கள் கூட்டம் அவரது உரையை கேட்பதற்கு திரண்ட நிலையில் பாஜகவிற்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை கண்கூடாக காண முடிந்தது இந்த நிலையில் பாஜகவிற்கு மக்களின் ஆதரவு ராமநாதபுரத்தில் அதிகரித்ததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்து விடுமோ என்ற பயத்தில் திமுகவினர் அண்ணாமலையின் நடைபயணத்திற்கு எதிராக பல அவதூறான கருத்துக்களை பரப்பி வந்தனர் என பாஜக தரப்பில் கூறப்பட்டது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடை பயணம் தமிழக மக்கள் இடையே வரவேற்பை பெற்ற நிலையில் திமுகவினரும் இதுபோன்ற செயல்களில் மக்களின் ஆதரவை பெறும் அளவிற்கு இறங்கி உள்ளனர் அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நடைபயிற்சி அமைக்கும் பாதையை திண்டுக்கல்லில் நடை பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார் மேலும் ராமநாதபுரத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்ததால் அதற்கு எதிராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீனவ சங்கம் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராமநாதபுரம் வர இருப்பதால் அவருக்கு உற்சாக வரவேற்பு தருவதற்காக பல இடங்களில் ஏற்பாடுகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மேற்கொண்டு வருகிறார்.
தமிழக முதலமைச்சர் ராமநாதபுரத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் மீனவ சங்கம் மாநாடு ஆகிய இரண்டிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் பேரவூரில் நடைபெறும் பயிற்சி பாசறை கூட்டத்தில் ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட பத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கான உணவு ஏற்பாட்டை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கவனித்து வருகிறார் இதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் மீனவ சங்க மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் சுமார் 50,000 மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்ளும் நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி பல நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
ராமநாதபுரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் உள்துறை அமைச்சருக்கு கிடைத்த வரவேற்பை விட அதிகமான வரவேற்பு மீனவ சங்க மாநாட்டில் கிடைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை நடைபயண துவக்கவிழாவில் கூடிய கூட்டத்தை விட அதிக கூட்டம் முதல்வர் வரும்போது கூடவேண்டும் என்பதற்காக திமுக திட்டம் போட்டு இவ்வாறான செயல்களை செய்து வருகிறது என தென் மாவட்ட அரசியல் புள்ளிகள் தெரிவிக்கின்றனர். மேலும் 'இது முதல்வருக்கு பிரெஸ்டீஜ் இஸ்யூ' அண்ணாமலையே அவ்ளோ கூட்டத்தை கூட்டும்போது நம்மால முடியாதா என திமுகவினர் தீயாக வேலை செய்து வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.