தற்போது திமுகவில் இருக்கும் அமைச்சர்களில் அதிகமானோர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் இருந்து வந்தவர்கள் அப்போதிலிருந்து தற்போதைய முதல்வர் இளைஞர் அணி தலைவராக இருந்ததாலும் மூத்த அமைச்சருடன் கொண்ட நல்ல நட்பு உறவாலும் தனது தந்தை இறந்த பிறகும் அவர்களை தனது கட்சியில் தொடர அனுமதித்து முக்கிய பொறுப்புகளையும் கொடுத்து வந்தார். ஆனால் இந்த முறை ஆட்சி பொறுப்பை ஏற்றாலும் ஏற்றார்கள் திமுகவின் மூத்த அமைச்சர்களே கட்சியின் அவப்பெயருக்கு அதிக காரணமாக இருந்துள்ளனர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதாவது விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை பார்த்து கைகோர்த்து வந்த தொண்டர்களை வேகமாக தடுத்து நிறுத்தும் அமைச்சர் கே என் நேரு, திருவள்ளூர் தொகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்ட அமைச்சர் நாசர் தனக்கு நாற்காலி எடுத்துட்டு வர தாமதமானதால் திமுக நிர்வாகி மீது கல்லை தூக்கி எறிந்த சம்பவம், மேலும் மக்கள் தங்கள் குறைகளை கூறினால் அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க, அதிகமாக கேள்வி எழுப்பினால் லூசு என்று ஒருமையில் பேசி திட்டுவது அமைச்சர் பொன்முடியின் செயல் இதுபோன் சம்பவங்களால் மக்கள் திமுக அமைச்சரவையின் மீது கோபமாக இருப்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கெல்லாம் பெரிதாக திமுக தனது ஆட்சியிலே இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத ஒரு சிறப்பு திட்டமாக பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை தனது பெருமைகளின் பெருமையாக மார்தட்டி கொண்டிருக்கின்ற சமயத்தில் இலவச பேருந்தில் பயணிக்கும் பெண்களைப் பார்த்து ஓசி டிகெட் என்று கூறுவதோடு அவர்களை விமர்சனம் செய்தது தமிழக மக்களிடையே திமுக மீது அதிருப்திகள் பல ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தது. இதை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அடுத்தடுத்த நிகழ்ந்த சம்பவங்கள் இதனால் முதல்வர் மு க ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளின் பொதுக்கூட்டத்தில் அதிக அளவில் புலம்பியதோடு, இரவு தூங்க முடியவில்லை அடுத்த நாள் விழித்தால் நமது கட்சியின் நிர்வாகிகளே என்ன பிரச்சனை வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து எனக்கு தூக்கம் வரவில்லை என்று தனது வேதனையை தெரிவித்தார் அதற்கு பிறகும் சில மூத்த அமைச்சர்கள் அடங்காமல் வழக்கம்போல் தனது செயல்களை காட்டி வந்தனர் அவை அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்த சர்ச்சைகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவுகிறது இதன் மூலமே எதிர்க்கட்சிகள் தங்களது அரசியலை செய்து வருகின்றனர் என்பதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் சமீப காலமாக அனைத்து பொதுக் கூட்டங்களிலும் பேசுவதற்கு முன்பாக தகுந்த ஆதாரங்களோடு பேச வேண்டும் இல்லையெனில் நாம் பேசுவதை வெட்டியும் ஒட்டியும் சமூக வலைதளத்தில் வெளியிட எதிர்க்கட்சியுங்கள் தயாராக உள்ளனர் இணையத்தில் அதிகமாக இணைப்புடன் இருங்கள் என்று தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நமது நாட்டின் 77வது சுதந்திர தின விழா இரண்டு தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. பல பகுதிகளில் பல அரசியல் நிர்வாகிகள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். அந்த வகையில் சாக்கோட்டை திமுக எம்எல்ஏவான அன்பழகன் தேசிய கொடியை ஏற்றும் பொழுது தேசியக்கொடி கீழே விழுந்துள்ள வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியுள்ளது.
இந்த சம்பவம் திமுகவிற்கு விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது, இதனால் சாக்கோட்டை அன்பழகனை கூப்பிட்டு அறிவாலயம் கண்டபடி திட்டியதாகவும், தேசிய கொடியை ஏற்றும்பொழுது கூட கொடி கட்டப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள மாட்டீர்களா இவ்வளவு கவன குறைவா!! ஆட்சியைப் காப்பாற்ற நாங்கள் என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் என்றால் இந்த சிறு சிறு பிரச்சனைகளை செய்து எனக்கு மேலும் தலைவலியை கொடுக்கிறீர்கள் என்று கண்டித்து அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.