24 special

குருவாயூர் கோயிலுக்கு தங்க கிரீடம் கொடுத்த முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின்... ! அதிரவைக்கும் பின்னணி இதுதானா...?

Mkstalin , durga stalin
Mkstalin , durga stalin

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற பல கோயில்கள் இருக்கும் நிலையில் பக்த கோடிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கேரள மாநிலத்திற்கு விரும்பிச் சென்று கோயில்களில் வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்றாக இருந்த வருகிறது. அப்படி கேரள மாநிலத்தில் திருச்சூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குவது குருவாயூர் கிருஷ்ணன் கோயில். இந்தக் கோயிலில் பக்த கோடிகள் தினம் தோறும் கிருஷ்ணன் சுவாமியை தரிசித்து பல வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர். மேலும் தென்னிந்தியாவின் துவாரகா என்று அழைக்கப்படும் குருவாயூர் கோயிலில் அன்னை தேவகி மற்றும் வாசுதேவருக்கு கிருஷ்ணா அவதாரத்திற்கு முன் குருவாயூர் கோயிலில் தான் தோற்றமளித்தார் என்பதால் குருவாயூர் கோயில் தென்னிந்தியாவின் முக்கியமான வைணவ தலங்களில் ஒன்று...!


இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது உறவினர்களுடன் வருடம் தோறும் குருவாயூரில் உள்ள கிருஷ்ணனை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு துர்க்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலுக்கு சென்று எடைக்கு எடை சர்க்கரை மற்றும் துலாபாரம் வழங்கியதை முன்னிட்டு அவரது சார்பில் ஒன்பதாயிரத்தி இருநூறு ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டது மேலும் கோவிலில் சுற்றி உள்ள விளக்குகள் இயற்றப்பட்டதால் அதற்கு 40 ஆயிரம் ரூபாய் தொகை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது மட்டும் இல்லாமல் இந்த வருடம் குருவாயூர் கோயிலில் உள்ள கிருஷ்ணனுக்கு தங்க கிரீடம் வழங்குவதாக நேர்த்திக்கடன் வைத்தார் என தெரிகிறது. இந்நிலையில் துர்கா ஸ்டாலின் தனது நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலுக்கு தனது உறவினர்களுடன் சென்று 14 லட்சம் மதிப்பில் 32 பவுனில் தங்க கிரீடம் செய்து கோவிலில் செலுத்தியுள்ளார் இது மட்டுமில்லாமல் எஞ்சியுள்ள சந்தன கட்டைகளை அரைப்பதற்கு கோவிலில் போதிய வசதி இல்லாத நிலையில் வனத்துறையிடம் திருப்பிக் கொடுத்தாலும் கோயிலுக்கு தான் நஷ்டம் என்ற பட்சத்தில் சந்தன கட்டைகளை அரைப்பதற்கு எந்திரத்தை வாங்கிக் கொடுத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தங்க கிரீடம் என்பது ராஜா மற்றும் ராஜாவின் பதவி சார்ந்தது மேலும் துர்கா ஸ்டாலின் இந்த தங்க கிரீடத்தை கிருஷ்ணனின் ஜென்ம நட்சத்திர நாளன்று கொடுத்துள்ளதால் அது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கும் பதவிக்கு எந்த ஆபத்து வந்து விடக்கூடாது என்பதாகத்தான் இருக்கும் ஜோதிடர்கள் சிலர் கூறி வருகின்றனர், மேலும் தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் அமலாக்கத்துறை மற்றும் வருமான துறையின் சோதனை செந்தில் பாலாஜியின்  சிறை ஆகியவை திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் குருவாயூர் கோயிலுக்கு தங்க கிரீடம் வழங்கியதையும் சம்மந்தப்படுத்தி ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.

 குருவாயூர் கோவிலுக்கு கிரீடம் கொடுப்பதன் மூலம் ஆட்சிக்கு ஏற்படும் இன்னல்கள் நீங்கும், இடர்பாடுகள் ஏதும் வந்தால் அதனை சரி செய்யும், ஆபத்து ஏதும் வராமல் தடுக்கும் என்பதும் சிலரால் ஐதீகமாக சொல்லப்பட்டு வருகிறது..ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் நடைபயண துவக்க விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணையில் பேசினால் அது முதல்வருக்கு ஆபத்து என கூறியதும், தற்போது அமலாக்கத்துறை கடும் சட்ட போராட்டங்களுக்கு பிறகு செந்தில்பாலாஜியை விசாரணைக்கு எடுத்திருப்பதும், இப்பொது முதல்வர் மனைவி குருவாயூர் கோவிலுக்கு ஆட்சி பீடத்தின் அடையாளமான கிரீடத்தை வழங்கியதும் சம்மந்தப்படுத்தி அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டு வருகிறது....