24 special

செந்தில் பாலாஜியை விட வசமாக சிக்கிய அவரது தம்பி அசோக் குமார்....! பதுங்கிய பகீர் ஆவணங்கள் வெளியே வந்தன...!

Senthil balaji,ashok kumar
Senthil balaji,ashok kumar

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் பிடியில் சிக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது தம்பி அசோக் குமார் என்பவர் அமலாக்கத் துறையிடம் வசமாக சிக்கியது செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் திமுகவினருக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் வழக்கை விடாமல் தொடர்ந்து பல கட்ட சோதனைகளை நடத்தி வரும் நிலையில் மறைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆவணங்களும் வரிசையாக கிடைத்து வருவதால் செந்தில் பாலாஜி இந்த வழக்கிலிருந்து வெளி வராத நிலை ஏற்பட்டுள்ளது. 


அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரு பக்கம் இந்த சோதனையில் சிக்கி உள்ள ஆவணங்கள் மற்றும் அதிர வைக்கும் உண்மைகளால் செந்தில் பாலாஜிக்கு வாழ்நாள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது

மேலும் கரூர் மாவட்டத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் மிகப்பெரிய பங்களா வீட்டில் சோதனையை நடத்தி வந்த நிலையில் அசோகுமாரின் மனைவி பெயரில் அந்த வீடு கட்டி வருவதால் அவரை உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது மேலும் அந்த பிரம்மாண்டமாக கட்டி வரும் பங்களா வீட்டில் இருந்து ஒரு கல்லை கூட நகர்த்த முடியாதபடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நோட்டீசை வழங்கியது மேலும் அந்த நோட்டீஸில் செந்தில் பாலாஜி புதிதாக கட்டி வரும் பங்களா வீடு முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் இருந்ததால் செந்தில் பாலாஜி தரப்பு ஆழ்ந்த அதிருப்தியில் இருந்து வருகிறது. 

இது மட்டும் இல்லாமல் அமலாக்க துறையின் அனுமதியில்லாமல் அந்த இடத்தில்  எதுவும் செய்ய முடியாத நிலையில் தற்போது செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய தம்பி அசோக் நிலை மோசமாகி உள்ளது, இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை நான்காவது நாளாக செந்தில் பாலாஜியை விசாரணை செய்து வரும் நிலையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அதாவது செந்தில் பாலாஜி எந்தெந்த இடங்களில் சொத்து வாங்கி இருக்கிறார் என்றும் எவ்வளவு கோடி மதிப்பில் வாங்கி இருக்கிறார் மேலும் அந்த சொத்து யாரிடம் இருந்து பெறப்பட்டது என வரிசையாக கேள்விகளை எழுப்பிய நிலையில் விசாரணை பல மணி நேரத்திற்கு மேலாக நடந்ததில் பல அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத் துறையினர் நில அளவையாளர்கள் மற்றும் பொறியாளர்களுடன் சென்று மதிப்பீடு செய்ததில் நிலத்தின் மதிப்பு 30 கோடி என்ற தகவல் வெளிவந்தது மட்டுமல்லாமல் இந்த நிலத்தை 10 லட்சத்துக்கு வாங்கியதாக பொய் கணக்கு காட்டப்பட்டு இருப்பதும் தெரியவந்தது மேலும் இந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது செந்தில் பாலாஜி மாமியார் லட்சுமி தனது நகைகளை விற்று 2.49 ஏக்கர்  நிலத்தை 10 லட்சம் ரூபாய் கொடுத்து ரமேஷ் அனுராதா என்பவரிடமிருந்து வாங்கியது குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய போது அந்த சொத்தில் உண்மையான மதிப்பு 30 கோடி என்று தெரியவந்ததுடன் 30 கோடி மதிப்புள்ள சொத்தை தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 


சாதரணமாக ஒரு லட்சம் ரூபாய் விவகாரம் என்றாலே அமலாக்கத்துறை விடாது ஆனால் தற்போது 30 கோடி ரூபாய் மதிப்புடைய உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத் துறைக்கு கிடைத்த நிலையில் செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கை விட அசோக் குமாரை குறிவைத்து அமலாக்க துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதற்குப் பின் செந்தில் பாலாஜி வெளியில் வந்தாலும் அவரது தம்பி அசோக் குமார் வெளியில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் செந்தில் பாலாஜியின் மொத்த நெட்வொர்க்கே முடங்கும் என்பதால் அமலாக்கத்துறை இந்த ஸ்கெட்ச்சை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.