24 special

அட பாவமே இது தெரியாமலா தீர்மானம் போட்டார்கள்... எதிரி வெளியில் இல்லை போலயே!

Ops and eps
Ops and eps

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா பொது செயலாளராக தேர்வு செய்யப்படும் போது எது போன்ற அதிகார மோதல் உண்டானதோ அதே போன்ற அதிகார மோதலை அதிமுக சந்தித்தது இருக்கிறது, ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் நேரில் ஒரே மேடையில் அமரும் நிகழ்வு கடைசியாக இதுவாகதான் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


இது ஒருபுறம் என்றால் சிவி.சண்முகம், கே. பி. முனுசாமி இருவரும் முதலில் சொல்லவேண்டிய முன்மொழிவை பின்பும், பின்பு சொல்லவேண்டியதை முன்பும் பேசி அனைத்தையும் கெடுத்து வைத்து இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வீற்றிருந்தனர். பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.

தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திடீரேன எழுந்து மைக் அருகே சென்று, அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார். தொடர்ந்து கே.பி.முனுசாமியும் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகவும், அவர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமைதான் என்றும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவழியாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் அதிமுக பொது குழு முடிவடைந்தது இந்தசூழலில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்தது செல்லாது என  வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர் புதிதாக எந்த தீர்மானமும் நிறைவேற்ற கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட சூழலில் அதிமுக அவைத்தலைவர் தேர்வு செய்தது செல்லாது எனவும் அப்படி முன்பே 23 தீர்மானங்களில் அவைத்தலைவர் தேர்வு குறித்து இருந்தாலும் செல்லாது என்கின்றனர்.

23 தீர்மானங்களும் நிரகாரிக்கப்பட்டது என்றால் பொது குழு உறுப்பினர்கள் தேர்வே செல்லாது, அப்படி இருக்கையில் அந்த பொது குழு எப்படி ஒப்புதல் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர், அவசரப்பட்டு அனைத்தையும் செய்து விட்டு திடீர் கோவத்தால் கே பி முனுசாமி சிவி.சண்முகம் மொத்தமாக சட்ட சிக்கலில் எடப்பாடி பழனிசாமியை சிக்கவைத்து இருப்பதாக கூறுகின்றனர் வழக்கறிஞர்கள்.

எது எப்படியோ பல அதிமுக தலைவர்கள் இன்று பொது குழு கூட்டத்திற்கு செலவு செய்த செலவு அனைத்தும் வீணாக போய்விட்டதே அடுத்த வாரமும் பொது குழுவிற்கு செலவு செய்ய வேண்டுமா என்ற கலக்ககத்தில் இருக்கிறார்களாம், பொது குழு செயற்குழு உறுப்பினர்களோ அடுத்த வாரமும் தங்கள் காட்டில் பண மழை தான் என்று கொண்டாட்டத்தில் இருக்கிறார்களாம், யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்று இணையத்திலும் அதிகம் பேசு பொருளாக மாறி இருக்கிறது.