மஹாரஷ்டிரா : மஹாரஷ்டிரா அமைச்சர்கள் ஐந்துபேருடன் மொத்தமாக 22 சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத் சூரத்தில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் பதுங்கியுள்ளனர். அவர்களை அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு பிஜேபி கடத்திச்சென்றதாக சிவசேனா புலம்பிவருகிறது. சிவசேனா செய்த துரோகம் திருப்பியடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2019 சட்டமன்றத்தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்து சிவசேனா தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் 106 இடங்களில் பிஜேபியும் சிவசேனா 55 இடங்களையும் வென்றது. உத்தவதாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சராக்க பிஜேபியை சிவசேனா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் கூட்டணிக்குள் விரிசல் விழுந்தது.
பிஜேபி கூட்டணியில் இருந்து போட்டியிட்டு வென்ற சிவசேனா வெற்றிக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது. இது பிஜேபிக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கு செய்த துரோகம் என பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில்தான் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் சிவசேனாவின் தூக்கத்தை கலைத்துள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில் பிஜேபியின் பலம் 134 என்ற எண்ணிக்கையில் இருக்கும். மேலும் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு தரும் பட்சத்தில் பிஜேபி மீண்டும் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது உறுதி என கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில்தான் ஷிண்டேவுடன் இருக்கும் 33 சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்நாவிசை ஜேபி நட்ட நேற்று சந்தித்து பேசியுள்ளார். அதைத்தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டுக்கு ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்டுசெல்லப்படுவார்கள் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மஹாராஷ்டிரா கவர்னர் தனக்கு கொரோனா என கூறி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.