24 special

நயன்தாராவிற்காக சின்னவர் செய்த வேலை அம்பலம்....!

udhayanithi, nayanthara
udhayanithi, nayanthara

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா! சமீபத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் மூலமாக ஹிந்தியிலும் அறிமுகமானார் நயன்தாரா.  முதலில் கிடைத்த படங்கள் அனைத்திலும் நடித்த நயன்தாரா ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கியவர் சர்ச்சை என்றால் காதல் சர்ச்சை மட்டுமே! தொடர்ந்து தமிழ் சினிமாவின் கிசுகிசு என்றால் நயன்தாரா பெயர் இல்லாமல் செய்தி பக்கங்கள் முடிவடையாது. அந்த அளவிற்கான கிசுகிசுக்களில் மாட்டியா நயன்தாரா ஒரு கட்டத்தில் சினிமா துறையில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்தார், அதற்குப் பிறகு கம்பேக் கொடுத்த நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்படும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களை  மட்டுமே தீர்வு செய்து நடித்து வந்த நயன்தாரா சில படங்களிலும் தோல்வியை சந்தித்தார்.


இருப்பினும் கிசுகிசுக்கள் மட்டும் நயன்தாராவை விட்டு விலகவே இல்லை! கடந்த வருடத்தில் பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இந்த இரண்டு குழந்தைகள் குறித்தும் இவர்களுக்கு திருமணம் குறித்தும் பல வகையான சர்ச்சையும் தமிழ் சினிமா முழுவதும் பரபரப்பாகவும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்ததாகவே கடந்த சில மாதங்களாக நயன்தாரா தொழில் முனைவோராக உருவெடுத்து வருகிறார் முதலில் 9 ஸ்கின் என்ற அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் தொழிலை தொடங்கிய நயன்தாரா விவசாயிகளுக்கு உதவும் வகையில் மஞ்சள் உற்பத்தியிலும் முதலீடு செய்தார். அதுமட்டுமின்றி தற்பொழுது ஃப்பெமி 9 என்கிற தொழிலையும் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் கடந்த வாரத்தில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் பெண்களுக்கு நாப்கின்களை வழங்கிய நயன்தாரா தரப்பு ஃப்பெமி 9 என்று நயன்தாராவின் பிராண்டை பிரபலப்படுத்தும் வகையில் வீடியோ எடுக்கப்பட்டு அதை சமூக வலைதளத்தில் நயன்தாரா பதிவிட்டதும் பல விமர்சனங்களை பெற்றது. 

இதனை அடுத்து நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் சென்னை மழை பாதிப்பு ஏற்படும் பொழுது வெளியானதாலோ என்னவோ கடும் சரிவை சந்தித்தது. மேலும் அன்னபூரணி படத்தால் நீதிமன்ற வழக்கையும் சந்தித்துள்ளார் நயன்தாரா! அதாவது அன்னபூரணி படத்தில், பிராமண பெண்ணாகவும் சமையல் கலை வல்லுனராக நடித்துள்ள நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று அப்படத்தில் நடிகர் ஜெய் கூறியது குறித்து ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் சோலன்கி மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் இப்படத்தில் நடித்த நடிகை நயன்தாரா ஜெய் மற்றும் இப்படத்தை வெளியிட்ட netflix  மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார், இந்த புகாரை பதிவு செய்த போலீசார் நயன்தாரா உள்ளிட்டோர் மீது எப் ஐ ஆரையும் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறும்போது, 'தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை மும்பைக்கு அனுப்ப சின்னவர் திட்டமிட்டுள்ளார்! அதுவும் நயன்தாரா மீது போடப்பட்டுள்ள எப்ஐஆர் குறித்த வழக்கு விசாரிப்பதற்காகவே தலைமை வழக்கறிஞரை வைத்து வாதாட உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்' என தெரிவித்தார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலாக உலாவருகிறது.