கடந்த டிசம்பர் மாத இறுதியில் தமிழ் திரை உலகின் சொக்கத்தங்கமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் சோகத்தை பரப்பியது. பல முன்னணி பிரபலங்களும், பிரதமர் நரேந்திர மோடியின் கூட கேப்டனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர், மேலும் தற்போது இளைய தளபதியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை தொடர்வதற்கு விஜயின் ஆரம்ப காலத்தில் உதவியவர் விஜயகாந்த்! விஜயின் இரண்டாவது படமான செந்தூரப் பாண்டி படத்தில் விஜயகாந்த் முக்கிய ரோலில் நடித்து விஜய்க்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை திரையுளவில் ஏற்படுத்திக் கொடுத்தார். இதேபோன்று விஜயகாந்த்தும் தன் மகன் சண்முக பாண்டியன் படம் ஒன்றிற்கு விஜயை முக்கிய ரோலில் நடிப்பதற்காக கேட்ட பொழுது விஜய் அதை நிராகரித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி கேப்டன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது விஜய் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை என்றதும் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை எழுப்பியது, இதனால் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த விஜய் வரும்பொழுது விஜயகாந்தின் ரசிகர் மற்றும் தொண்டர்கள் பல வகையில் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் விஜய் வெளியே போ வெளியே போ என்று கோஷமிட்டதோடு விஜய் மீது காலணி எறிந்த காட்சிகளும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் தனது தாய்யுடன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதை குறித்தும் அவரது வீட்டிற்கு சென்று விஜயகாந்தின் குடும்பத்தினருடன் உரையாடியது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.விஜயகாந்த் சாரின் வீட்டிற்கு சென்ற பொழுது அவரது மனைவி இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியின் சகோதரியும் இருந்தார் அவர்கள் என்னிடம் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் இருக்கிறார் நீங்கள் தான் இவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதும் என் மனதிற்கு மிகவும் வேதனை அளித்தது, ஏனென்றால் விஜயகாந்த் சார் சினிமாவில் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார் எத்தனையோ பேர் வளர்வதற்கு துணை நடிகராக நடித்து உதவி புரிந்திருக்கிறார் பலருக்கு வயிறார உணவளித்துள்ளார் அப்படி இருக்கும் பொழுது விஜயகாந்த் அவர்களின் மனைவியின் சகோதரி நீங்கள்தான் சண்முக பாண்டியனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது என்னை மிகவும் உறுத்தியது.
இதனால் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது, விஜயகாந்த் அவர்கள் மற்ற ஹீரோக்களின் திரைப்படங்களில் ஒரு முக்கிய ரோலை பெற்றிருக்கிறார் மற்றவர்களை வளர்த்து விடுவதில் அதிக மகிழ்ச்சி கொண்டவர் அதேபோன்று சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் படக்குழு அனுமதி மற்றும் விருப்பம் கொண்டால் நான் சண்முக பாண்டியன் படத்தில் முக்கிய ரோலிலோ அல்லது ஒரு பாடலுக்காகவோ அல்லது சண்டைக் காட்சிகளுக்கோ நடிக்க தயாராக உள்ளேன் இது படக்குழுவின் விருப்பம் மட்டுமே மேலும் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்திற்கு எவ்வளவு தூரத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டுமோ அதனை நானே செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று லாரன்ஸ் கூறினார். மேலும் எத்தனையோ ஹீரோக்களை வளர்த்து விட்டவர் அதனால் விஜயகாந்த் மகனும் வளர்வதை நாம் பார்க்க வேண்டும் அதோடு இரண்டு ஹீரோக்கள் இருப்பது போன்ற கதைகள் இருந்தாலும் என்னிடம் வந்து கூறுங்கள் என்றும் கூறினார். லாரன்ஸின் இந்த முடிவு, சினிமாவில் ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த விஜயகாந்த்தின் மகனுக்கு உதவி செய்யாமல் போனார் விஜய்! ஆனால் தற்போது லாரன்ஸ் அனைவருக்கும் உதவி செய்வது போன்று விஜயகாந்த் குடும்பத்திற்கு உதவி செய்ய இறங்கியுள்ளார் என சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.