World

இந்தியாவிற்காக 99 மற்றும் 100 பயன்படுத்திய ரஸ்யா.!இப்போ சொல்லுங்க "மோடி " செய்தது சரியா தவறா?

Pm modi and putin
Pm modi and putin

உலக அரங்கில் இந்தியா ரஸ்யாவிற்கு ஆதரவாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது மேலும் இந்தியர்களை ரஷ்ய ராணுவம் போர் சூழலிலும் பத்திரமாக மீட்பதாகவும் எந்த நாடும் செய்யாத செயலை இந்தியா செய்து வருவதாகவும் பாராட்டு கள் குவிந்து வருகின்றன. இது ஒருபுறம் என்றால் இந்தியாவில் சிலர் ரஸ்யாவிற்கு எதிராக இந்தியா ஐ நாவில் வாக்களிக்க வேண்டும் என்கின்றனர்.


இதற்கு ஸ்ரீ என்பவர் பதில் அளித்துள்ளார் மேலும் இந்தியாவிற்காக 99மற்றும் 100 வது முறை ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-

ஐ.நாவில் மொத்தம் இருக்கற பதினைந்துல பதினோரு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரா தீர்மானம் போட்டப்பவே அசால்டா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அடிச்சுத்தூக்கி இருக்கு ரஷ்யா. இதுல, ஆமாம்னு வாக்கு செலுத்தி ரஷ்யாகிட்ட பகைமையையோ; இல்லன்னு வாக்கு செலுத்தி அமெரிக்காக்கிட்ட பகைமையையோ வளர்த்துக்காம, அமைதியா இருந்த இந்தியாவின் அணுகுமுறையே சிறந்தது.

வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக ஐநாவில் எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் நிறைவேறாது.எப்படியும் வீட்டோவை உபயோகப்படுத்தி ரஷ்யா இந்தத் தீர்மானத்தை செல்லாததாக்கும்‌. உக்ரைன் போர்நிறுத்தத்துக்கு ஒருபோதும் உதவாது. இது தெரிந்தும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது, யாரெல்லாம் நம் பக்கம் என அறிந்து கொள்ளவே!

இந்தத் தீர்மானத்தில், நிரந்தர உறுப்பினராக வீட்டோ அதிகாரம் இருக்கிற சீனாவே அமைதியாக தான் இருக்கிறது. இந்தியா செய்தால் கோழைத்தனமாகி விடுமா என்ன?அனைத்து நாடும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கு செலுத்தும்பட்சத்திலும், நிரந்தர உறுப்பினராக இருக்கும் நாடு வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அந்தத் தீர்மானம் செல்லாக்காசு என இருக்கும் பட்சத்தில் இந்த ஐநா சபை அந்த தீர்மானங்கள் எல்லாம், நம்மை மாதிரி நிரந்தர உறுப்பினராக இல்லாத நாடுகளை மிரட்ட மட்டும் தான்.

ஒருகாலத்தில் நமக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில்ல நிரந்தர உறுப்பினராக வாய்ப்பு வழங்க அமெரிக்கா முன்வந்தபோதும், எங்களுக்கு நிரந்தர உறுப்பினராக பல விஷயங்களால உரிமை இருக்கு. ஆனா சீனாவின் விலையில் எங்களுக்கு வேணாம்னு ஜவஹர்லால் நேரு சொல்லி நிராகரித்தார். அப்போது என்னவோ அமெரிக்கா vs சீனா விஷயத்துல சிக்க விரும்பாம அப்படி செய்து இருந்தாலும் அதற்கான விலையை இன்னும் நாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இப்போது சீனா நிரந்தர உறுப்பினர். தன்னோட வீட்டோ பவரை, நமக்கு எதிராவும் பயன்படுத்தலாம். 

இதுவரை தனக்கு இருந்த வீட்டோ அதிகாரத்தை அதிகபட்சமாக 146 முறை பயன்படுத்திய நாடு ரஷ்யா.அதில் பல முறை இந்தியாவுக்காகவே உபயோகித்திருக்கிறது.1955ல் இந்தியா வந்திருந்த ரஷ்யாவின் அப்போதைய தலைவரான நிகிதா குருஷ்சேவ், சோவியத் யூனியன் (ரஷ்யா) உங்கள் எல்லைக்கு அப்பால் தான் இருக்கிறது. ஏதாவது பிரச்சனை என்றால், டெல்லியில் இருந்து ஒரு குரல் கொடுங்கள் என்றார். சொன்ன வார்த்தையை மெய்ப்பிக்கும் விதமாக, 1957ல் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தபோது, இந்தியாவின் நண்பனாக, வீட்டோ பவரை உபயோகித்து உடன் நின்றது ரஷ்யா.

1961ல் போர்ச்சுகல் ஆதிக்கத்தில் கோவா இருந்தபோது ஐநாவுக்கு போர்ச்சுகல் கடிதம் எழுதி, தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்கும் பகுதியை ஆக்ரமிக்கப் பார்க்கிறது என தீர்மானம் கொண்டுவந்தது. அமெரிக்கா, பிரிட்டன்,ஃப்ரான்ஸ் எல்லாம் இந்தியாவுக்கு எதிராக நின்றன. அதே ரஷ்யா, அதே நிகிதா குருஷ்சேவ் வீட்டோ பவரை பயன்படுத்தி, அந்தத் தீர்மானத்தை உடைத்தார். அது ரஷ்யாவின் 99வது வீட்டோ. அதற்கு பிறகே போர்ச்சுகல் வசமிருந்த கோவா நமதானது. ரஷ்யா மட்டும் நமக்காக அப்போது இல்லையென்றால், கோவா டூர் ப்ளானிங்குக்கு விசாவும் தேவைப்பட்டிருக்கும்.

அது மட்டுமில்லாது, ரஷ்யாவின் 100வது வீட்டோ பவரும் நமக்காகவே உபயோகிக்கப்பட்டது. அவரவர் நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தை எல்லா நாடுகளும் ஊதிப்பெருக்கும். அதே போல, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என அயர்லாண்டு தீர்மானம் கொண்டுவந்தது. மற்ற எல்லா நிரந்தர உறுப்பினர் நாடுகளான அமெரிக்கா, ஃப்ரான்ஸ், யூகே, சீனா ஆகியவை, அதானே! பேசித்தீர்த்துக்கோங்கப்பா என்றபோது, என் நாட்டின் பகுதியில் இருக்கும் காஷ்மீரை பற்றி பக்கத்து நாடான பாகிஸ்தானுடன் ஏன் பேச வேண்டும் என்று நின்ற இந்தியாவுக்கு, வீட்டோ பவரை பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை ரத்து செய்தது ரஷ்யா.

1971ல் வங்கதேசம் உருவாக காரணமாக இருந்த இந்தியா - பாகிஸ்தான் போரின்போதும் ஐநா தீர்மானங்களின்போது, அது அவர்களுக்குள்ளான விவகாரம் இதில் மூன்றாம் நாடுகளின் தலையீடு தேவையற்றது என, மூன்று முறை தனது வீட்டோ அதிகாரத்தை நமக்காக பயன்படுத்தியது ரஷ்யா. ஆனால் கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் நமக்கு எதிராகவே நின்றது உக்ரைன். அமெரிக்காவும் பல முக்கிய பிரச்சினைகளின்போது இந்தியாவுக்கு எதிராக வாக்களித்தது. 

சர்வதேச அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது எதிரியும் கிடையாது. சர்வ பலம் பொருந்திய இரு நாடுகள் எதிரெதிரே இருக்கும்போது எல்லோருக்கும் நண்பனாக காட்டிக்கொண்டு, நமது நாட்டின் பிரச்சினையை கவனிப்பதே புத்தியுள்ளவன் செய்யும் வேலை.அதைத் தான் நரேந்திர மோடி செய்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீ.