பாஜக என்றால் யாரும் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்களை செய்யும் கட்சி என்றுபலரும் அறிவர், முதல்வர் வேட்பாளர் தேர்வில் தொடங்கி குடியரசு தலைவர் வேட்பாளர் வரை பாஜக அறிவிக்கும் வரை யார் என்றே யாராலும் யூகம் செய்யமுடியாது அதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு மகாராஷ்டிரா முதல்வர் தேர்வு மற்றும் குடியரசு தலைவர் வேட்பாளர் வரை பாஜக அறிவித்த பின்புதான் தெரியவந்தது.
இப்படி இது ஒரு வகை ட்விஸ்ட் என்றால் இன்று பிரதமர் கலந்துகொள்ளும் பாஜக செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறுகிறது, பிரதமர் மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் வருகையை ஒட்டி, அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு அரங்கேரி வருகிறது, இந்த சூழலில் பிரதமர் வருகையை ஒட்டி புதிதாக ஒருவர் தெலுங்கானா மக்கள் இடையே மிக பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.
அவர் சாதாரண சமையல் மாஸ்டர் யாதம்மா, இன்று பிரதமருக்கே உணவு தயார் செய்து கொடுக்க இருப்பதால் உள்ளூர் ஊடகம் முதல் ஆங்கில ஊடகம் வரை யாதம்மா பெயர்தான் முன்னணியில் இருக்கிறது, இது பற்றி யாதம்மா கூறியதாவது:- சிறு வயதில் கூலித் தொழிலாளி ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். மணமான மூன்றாவது ஆண்டில் கணவர் இறந்து விட்டார். மாமியார் கொடுமை தாங்காமல் கைக்குழந்தையுடன் கரீம் நகருக்குவந்தேன்.
இங்கு, வெங்கண்ணா என்ற சமையல் கலைஞரிடம் வேலைக்குச் சேர்ந்து, நூற்றுக்கணக்கானோருக்கு சமையல் செய்வதை கற்றுக் கொண்டேன்.நாளடைவில் நானே 'ஆர்டர்' எடுத்து நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்தேன். அரசியல் மாநாடு, கட்சி கூட்டங்களுக்கு உணவு தயாரித்து கொடுக்கிறேன்.இந்நிலையில், ஹைதராபாத் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு தெலுங்கானாவின் சிறப்பு உணவுகளை சமைத்துக் கொடுத்து அசத்த உள்ளேன்.
இந்தப் பெருமையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பாஜக எப்போதும் அதிரடிக்கு பெயர் போன இயக்கம், இப்போது எளிமையான யாதம்மா என்ற சமையல் கலைஞரை கொண்டு பிரதமருக்கே உணவு தயாரித்து பரிமாற இருப்பதன் மூலம் இந்த விஷயத்தையும் மக்கள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
சாமானிய மக்கள் கூட இப்போது யாதம்மா சமையலை பிரதமர் மோடி சாப்பிட இருக்கிறாரா எவ்வளவு எளிமையான பிரதமர் என்று சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.