மகாராஷ்டிரா அரசியல் மாற்றம் மற்ற மாநிலங்களிலும் கடும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது, சிவசேனா அரசாங்கம் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் இந்துத்துவ பாதையை பின்பற்றவில்லை என்று கூறியும் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இந்த சூழலில் உத்தவ் தாக்கரே தரப்பை காட்டிலும் வெளியே வந்த ஷிண்டே தரப்பிடம் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர், இந்த சூழலில் பாஜக முதல்வர் பதவியை விட்டு கொடுத்து இருக்கிறது, இது ஒருபுறம் என்றால் சிவசேனா கட்சியை சேர்ந்த ஷிண்டே அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தது போன்று தமிழகத்தில் யாரால் மாற்றம் உண்டாகும் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்தது.
இதனை முன்வைத்து நமது TNNEWS24 DIGITAL முகநூல் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தோம் அதில் 500க்கு மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர் இதில் 400க்கு மேற்பட்டோர் செந்தில் பாலாஜிதான் அடுத்த ஷிண்டே என கருத்து தெரிவித்து இருக்கின்றனர், இது ஒருபுறம் என்றால் பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் கொங்கு மண்டல தளபதி செந்தில் பாலாஜியே எங்கள் ஷிண்டவே என தீம் மியூசிக் போட்டு வீடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இது செந்தில்பாலாஜி வரை சென்றுள்ளது, இந்த பாஜகவினருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என கடுகடுத்து இருக்கிறார் செந்தில்பாலாஜி, போதாத குறைக்கு செந்தில்பாலாஜி குறித்து வைரலாகும் வீடீயோக்களை திமுகவில் இருக்கும் செந்தில்பாலாஜி வளர்ச்சியை பிடிக்காத நபர்களும் தலைமைக்கு forward செய்து இருக்கிறார்களாம்.
இந்த விவகாரம் வெளிப்படையாக வெளிவராத நிலையில் சேர வேண்டியவர்களுக்கு சென்றுள்ளதாம், மொத்தத்தில் அரசியலில் எப்போது என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்து அமைச்சராக இருப்பார் என 10 ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்து இருந்தால் அவரே நம்பி இருக்க மாட்டார் ஆனால் இப்போது என்ன? அதே போல் வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது என பலரும் கேள்வி குறியாகவே செந்தில் பாலாஜியை பார்க்கின்றார்களாம்.
இப்போது சந்தோசமா என கஞ்சா கருப்பு திரைப்படம் ஒன்றில் கேட்கும் வசனத்தை போன்று, செந்தில்பாலாஜி விரைவில் கேட்பார் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.