பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்து வந்த மைதிலி வினோ கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக மின்சார துறை அமைச்சரான செந்தில்பாலாஜி சந்தித்து திமுகவில் இணைவது குறித்து பேசி வந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்பட்டது. அதே சமயத்தில் கோவை பாஜக மாவட்ட தலைவராக இருந்த பாலாஜி உத்தம ராமசாமி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதோடு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மைதிலி வினோ நடந்து கொண்டதாக குற்றம் சாடி அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டார். இதனை அடுத்து பாஜக மாநில மகளிர் அணிச் செயலாளராக மைதிலி திமுகவில் இணைந்ததாகவும் அது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி இடமும் கடந்த சில நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில்,. பாரதிய ஜனதா கட்சியின் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக சேர்ந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிர் அணி மாநில மகளிர் அணி என பல பொறுப்புகளில் சிறப்பாக தனது பங்கை மாற்றி வந்தேன் ஆனால் சமீப காலமாக பாஜகவின் மாவட்ட தலைமை நடவடிக்கை சரி இல்லாததால் கட்சியிலிருந்து விலகுவதற்கு முடிவெடுத்தேன் அதன் காரணமாகவே தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்து திமுகவில் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டேன்.
ஆனால் இன்று கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக என்னை கட்சியிலிருந்து தூக்கி உள்ளீர்கள்! அப்படி என்ன களங்கத்தை விளைவித்தேன் என்பதை தங்களால் கூற முடியுமா? கலங்காமல் கட்சிக்காக வந்ததால் இதனை கூறி உள்ளீர்களா? பணத்தின் மூலமாக மாவட்ட தலைவராக மாறுகிறீர்கள் என்றால் கட்சியின் அடிப்படையில் உழைத்தவர்களுக்கு என்ன கதி! மேலும் மூத்த நிர்வாகிகள் அவமதிக்கப்பட்டு பணம் படைத்தவர்களுக்கு பதவிகள் வழங்கும் தங்களைப் போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் இருக்கும் வரை தாமரை மலர வாய்ப்பில்லை! மேலும் மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களைப் போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது நிச்சயம் என்று அன்றைய பாஜக கோவை மாவட்ட தலைவரை குறித்து பலவாறு விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் திமுகவிலிருந்து விலகி அவர் மீண்டும் பாஜகவில் தற்போது இணைந்துள்ளார். மேலும் திடீரென்று கட்சி மாறியது குறித்தும் மைதிலி வினோ, 2022 ஆம் ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பின் பேரில் திமுகவிற்கு சென்றேன் ஆனால் தற்பொழுது அவரே அங்கு இல்லை! அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்தவரையில் திமுகவில் எனக்கு உரிய முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவியும் கொடுத்தனர்.
ஆனால் என்று அவர் கைதானாரோ அன்றிலிருந்து மாவட்ட கழகமும் பகுதி கழக நிர்வாகிகளும் என்னை புறக்கணிக்க தொடங்கினர். எந்த கட்சி நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்புகள் கொடுக்கப்படவில்லை! 2022-ல் பாஜகவின் அப்போதைய மாவட்ட தலைவராக இருந்தவரை செயல்பாடுகளில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் பாஜகவில் இருந்து விலகினேன் அதோடு செந்தில் பாலாஜி சிறை சென்றதாலும் அங்கு புறக்கணிப்பை சந்தித்தேன். மேலும் செந்தில் பாலாஜி இருந்தவரையில் எந்த ஒரு உட்கட்சி பூசலும் ஏற்படாமல்கோவை மாவட்டத்தை திமுகவின் கட்டுக்குள் வைத்திருந்தார், ஆனால் தற்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் திமுக மூன்று நான்கு கோஷ்டிகளாக பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது! வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்களும் அதிக அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவும் மறுபக்கம் பிளவு பட்டிருக்கிறது அதனால் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவை நோக்கி அதிகம் வருகிறார்கள் இதனால் களம் பாஜகவிற்கு சாதகமாக மாறி வருகிறது என்று செய்தியாளர்கள் மத்தியில் கூறி மீண்டும் பாஜகவின் இணைந்துள்ளார்