ஒருவர் அர்த்தமில்லாமல் கோபப்படுகிறார் என்றாலும் உணவு உண்ணும் போது கோபப்படுகிறார் என்றாலும் இரண்டிற்குமே முக்கிய காரணம் உணவு மற்றும் பசி மட்டுமே. ஒருவர் தீராத பசியில் இருக்கும் பொழுது பசியை தீர்ப்பதை விட்டுவிட்டு கேள்விகளை கேட்கும் பொழுது அவர் தன்னையும் மறைந்து கோபத்தில் கத்தி பேசுவார், அதேபோன்று உணவு உண்டு கொண்டிருக்கும் பொழுது உணவில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது உண்ண முடியாத வகையில் இருந்தாலும் அவரது கோபத்தை யாராலும் அடக்க முடியாது. அதே சமயத்தில் வயிறார மற்றும் சுவையான உணவு ஒருவர் வழங்குகிறார் என்றால் அவரின் உணவிற்கு மற்ற அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அப்படி ஒரு பெண்ணின் உணவிற்கு இங்கு இரண்டு மாநிலமே அடிமையாகி உள்ளது.
ஹைதராபாத்தில் துர்கம் செருவு பகுதியானது ஐடி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி இந்த பகுதிகளில் தள்ளுவண்டி உணவு கடைகளும் அதிகமாக இயங்கப்படும் ஏனென்றால் பெரும்பாலான ஐடி தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் உணவு உண்டு வருவர் இதனால் இந்த பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் விடிய விடிய நடைபெற்று வரும். இதே பகுதியில் குமாரி ஆன்டி என்பவரின் தள்ளுவண்டி உணவு கடையில் மிகவும் பிரபலம் அதாவது மிக குறைந்த விலையில் சைவம் மற்றும் அசைவ உணவுகளை சுவையாக வழங்கி வரும் இவரின் தள்ளிவண்டி கடைக்கு அதிகம் பேர் வந்து உணவு உண்டு செல்வதாக கூறுவார்கள் இதனை அடுத்து youtube சேனல் மூலம் இவரது வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதால் குமாரி ஆண்டி பிரபலமானார். இதனால் அவரது கடையிலும் கூட்டம் குவிந்தது பல youtube மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் இவரது கடைக்கு வந்து உணவருந்தி சென்றதாலும் இப்பகுதி முழுவதும் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் நிறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் செயல்பட்டு வரும் இந்த பகுதியில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அதனால் இப்பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்றவும் வேண்டும் என்று போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற புகாரை அடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் குமாரி ஆன்ட்டியின் தள்ளுவண்டி கடையும் அகற்றப்பட்டது சமூக வலைதளம் முழுவதும் வைரலானது.
இதற்கிடையில் ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு குமாரி ஆன்ட்டியின் கடை உரிமையாளரான சாய் குமாரிக்கு வீடு வழங்கியதால் ஆந்திர எதிர்க்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகிய இருவரும் சேர்ந்துதான் குமாரி ஆன்ட்டியின் தள்ளுவண்டி கடையை மூடுவதில் முக்கிய பங்காற்றியதாகவும் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது ஆட்சியில் அடித்தட்டு மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும் இது அரசியல் விவகாரம் என்றும் அதில் இவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு குமாரி ஆன்ட்டியின் தள்ளுவண்டி கடை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை அடுத்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்த பதிவிற்கு சமூக வலைதளங்கள் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படி சுவை மற்றும் மலிவான விலையில் பிரபலமான குமாரி ஆன்ட்டியின் தள்ளுவண்டி கடைக்கு இரண்டு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்திருப்பது பலரது கவனத்தை பெற்றுள்ளது.