திமுக கட்சியின் முக்கிய பதவியில் இருந்து வந்த செந்தில் பாலாஜி இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் போனதற்கு முக்கிய காரணம் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் இருந்து கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததால் அந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. மேலும் செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் செந்தில் பாலாஜி உடல்நலம் சரியான பிறகு அமலாக்கத்துறை கட்டாயமாக செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்கும் என்ற தீர்ப்பை வழங்கியதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அமலாக்கத்துறை தனது சோதனையை செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் தொடங்கியதில் அவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்ற பெயரில் செந்தில் பாலாஜி மற்றும்அவரது தம்பி அசோக்குமாறும் அமலாக்கத்துறை வசம் வசமாக சிக்கியுள்னனர்.மேலும் செந்தில் பாலாஜி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து ஐந்து நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்தியதில் பல அதிரவைக்கும் உண்மைகளும் வெளிவந்ததால் 3000 பக்க குற்ற பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்திய நிலையில் அதனுடைய தேதியை மூன்று நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது மேலும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை சென்னை சிறப்பு நீதிமன்றம் வழக்கை முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றியது.
ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்றம் நாங்கள் இந்த வழக்கில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்த நிலையில் மீண்டும் வழக்கறிஞர் இளங்கோ ஜாமின் மணுக்காக சிறப்பு நீதிமன்றத்தை நாடிச் சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது ஆனால் இன்று வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காதது தான் செந்தில் பாலாஜி தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.மேலும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் இந்த வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்று சென்னை நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வந்த பிறகுதான் இந்த ஜாமின் மனு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில் செந்தில் பாலாஜியின் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியதாக தெரிகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பின் அடிப்படையில் என்னதான் எம்பி எம்எல்ஏவாக இருந்தாலும் பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி எம்பி எம்எல்ஏகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது சரியானது அல்ல என்றும் உடனடியாக அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு ஆவணங்கள் அனைத்தும் மாற்றப்பட்டது.
இந்நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அருண் தனது வாதங்களை முன்வைத்து மனுவை தாக்கல் செய்த நிலையில் அவர் அந்த மனுவை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது ஆனால் விசாரணைக்கு பிறகுதான் ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.ஆரம்ப காலகட்டத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையே ஏற்றுக்கொள்ளாத செந்தில் பாலாஜி தரப்பு தற்போது ஜாமீுனுக்காக மனு மீது மனு போட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செந்தில் பாலாஜியை கண்டு கொள்ளாத நிலையில் எப்படியாவது வெளியில் வந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் செந்தில் பாலாஜி தரப்பு இருந்து வருவதாக தகவல்கள் தெரிகிறது.