24 special

தோண்டி தோண்டி எடுக்கும் நீதிமன்றம் சிக்கலில் அடுத்த திமுக அமைச்சர்...!

k.k s.s r ramachanthiran, thangam thennaru
k.k s.s r ramachanthiran, thangam thennaru

ஏற்கனவே திமுக வில் உள்ள முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மீது கடந்த ஆட்சி காலத்தில் குற்றப்பிரிவு போலீஸ் பதிந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியதன் மூலம் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்த நிலையில் அவர்களின் வழக்குகள் தற்போது நீதிமன்றங்கள் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாகியும் இந்த வழக்குகள் முடியாத பட்சத்தில் இவர்களின் வழக்குகளில் பல முக்கிய சிக்கல்கள் இருப்பதால்தான் இப்படி நீதிமன்றங்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர் என்று அரசியல் விமர்சனங்களும் எழுந்தன.


அதனைத் தொடர்ந்து கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கடந்த ஆட்சி காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதால் பதிவு செய்த வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு  நீதிமன்றம் தானாகவே முன்வந்து இவர்களின் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது இவர்களின் வழக்கை விசாரித்த முதன்மை  அமர்வு நீதிமன்றங்கள் வழக்கை முறையாக விசாரிக்காமல் இவர்களை விடுதலை செய்த நிலையில் நீதித்துறை சார்பில் ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் அடுத்தபடியாக இந்த வரிசையில் சிக்கி உள்ள முக்கிய நபராக ஐ பெரியசாமி பார்க்கப்படுகிறார்.

அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டு வசதி துறை வாரிய அமைச்சராக இருந்த பெரியசாமி வீட்டு வசதி வாரிய துறைக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலரான கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததால் கடந்த 2012 ஆம் ஆண்டு பெரியசாமி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர் இந்த வழக்கு எம்எல்ஏ எம்பி களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கிலிருந்து ஐ பெரியசாமியை விடிவித்து கடந்த மார்ச் மாதத்தில் உத்தரவு வெளிவந்தது இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றம் வழக்குகளை சரிவர கவனிக்கவில்லை என்பதால் அதை மீண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதால் அனைவரும் என்னை வில்லனாக பார்க்கின்றனர் என்றும் கீழமை நீதிமன்றங்கள் சரிவர செயல்படாமல் வழக்குகளில் இருந்து முக்கிய குற்றவாளிகளை விடுவித்ததால் தான் தற்போது இந்த வழக்கு மீண்டும் எடுத்து நடத்தப்படுகிறது என்று எடுத்துரைத்தார். மேலும் முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் இந்த வழக்கை முறைப்படி விசாரணை செய்திருந்தால் தற்போது மறு விசாரணை செய்வதற்கு அவசியம் இல்லை என்று கூறியதோடு கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார் மேலும் அமைச்சர் ஐ பெரியசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்ததோடு பெரியசாமியின் வழக்கை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து ஐ பெரியசாமியும் அவர்களோடு சேர்ந்துள்ளார் என்று தெரிகிறது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தண்டனை பெரும் பட்சத்தில் அவருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளன. இப்படி வரிசையாக திமுக அமைச்சர்கள் சிக்குவது அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கண்டிப்பாக திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது....