![Moorthy, TTV Dinakaran](https://www.tnnews24air.com/storage/gallery/b4UgwSDulX12ZbD2YDddvBENP2O8NqBkadwN7WfI.jpg)
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் திருவிழா களத்தில் களைகட்டி வருகிறது. அதிமுக தனித்து 32 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 20க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்து களம் காணவுள்ளது. திமுக பொறுத்தவரை 21 இடங்களில் போட்டியிடுகிறது அதிலும் தென்மாவட்டத்தில் ஓரிரு இடத்தில் மட்டுமே திமுக நிற்கிறது மற்ற தொகுதிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக சார்பாக போட்டியிடும் தேனீ தொகுதியில் வேட்பாளர்கள் வெற்றி பெற செய்யாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக தேனியில் நாராயணசாமி என்பவர் போட்டியிடுகிறார் திமுக சார்பாக தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். தேனீ தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் இரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இந்த முறை தேசிய கூட்டணியில் உள்ள தினகரன் நேரடியாக களம் இறங்குகிறார்.
இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பேசியபோது, தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் இதற்காக திமுக தொண்டர்கள் அயராது பாடு பட வேண்டும். தேனி தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் எனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்வேன் என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து கட்சிக்கு உழைக்காதவர்கள் வெளியேறிவிடுங்கள் கட்சிக்கு துரோகம் செய்யாதீர்கள் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனுக்கு தான் செல்வாக்கு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொகுதியான அங்கு டிடிவிக்கு பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறியுள்ளார். திமுக தென் மாவட்டத்தில் தேனி தொகுதியில் நிற்பதால் அமைச்சர் மூர்த்திக்கு அங்கு நிற்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என்று திமுக அறிவாலயம் கட்டளை இட்டுள்ளதன் காரணமாகவே அமைச்சர் மூர்த்தி கண்கலங்குவது போல் பேசுகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுக பாஜக, நாம் தமிழர் என்ற போட்டி நிலவுவதால் நிச்சயம் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெறவேண்டும் என்று பரபரப்பாக வேலைகளை செய்துவருகிறது. இந்த முறை திமுங்க வேட்பாளர் வெற்றி பெறுவதர்க்கு களம் சத்தியமாக இல்லை மக்கள் எல்லாம் பாஜக பக்கம் திரும்பியுள்ளனர் இதனால் வாக்குகள் சிதறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் திமுகவை சேர்ந்தவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தலும் மக்கள் அதனை ஏற்று கொள்ளமாட்டார்கள் களம் எப்படி இருக்கும் யாருக்கு சதகம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. நாடளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்ட பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.