24 special

மாமரத்தின் இறைவன் என்று அழைக்கப்படும் கோவிலை பற்றி அறிந்திருக்கின்றீர்களா???

shivan temple
shivan temple

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் தான் அது!! தொண்டை நாட்டு தளங்களில் முதலாவது தளமாகவும், தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் இந்த ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத பழங்களில் இந்த கோவில் நிலத்தை குறிக்கின்றது. இந்தக் கோவிலின் கட்டிட அமைப்பை பார்த்து 600 ஆம் ஆண்டு கட்டியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அந்த அளவுக்கு மிகவும் பழமையான கோவிலாக இந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் முக்கிய கடவுள் ஆனா சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்றும் ஏலவால் குழவி என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சிவபெருமானை கிருத்துவ லிங்கம் என்று அழைக்கின்றனர். எம்எஸ் ஸ்தானத்தில் இருக்கும் சிவபெருமான் மண்ணால் ஆனவர்.


இந்த கோவிலின் தல வரலாறு என்னவென்று பார்த்தால் ஒரு முறை பார்வதி கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. அதன்பின் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை திறந்து இந்த உலகத்திற்கு வெளிச்சத்தை அளித்தார்.இந்த தவறினால் பார்வதியை பூலோகத்திற்கு சென்று தன்னை நோக்கி தவம் இருக்க சொன்னார் சிவபெருமான். இப்போது பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். பார்வதியின் தவத்தை உலகத்திற்கு அறிய செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உருவாக்கினார். அப்போது பார்வதியின் பக்தியை கண்டு சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்தார். இரண்டு படி நெல்லை கொடுத்து காமாட்சி என்று அழைக்கப்பட்டார். பார்வதியால் உருவாக்கப்பட்டது தான் அந்த மண்ணால் ஆன சிவலிங்கம்.

இந்தக் கோவிலில் ஸ்படிக லிங்கம் அமைந்துள்ளது. இது சிவனுக்கு மிகவும் உகந்த லிங்கமாகும். மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய இந்த லிங்கத்திடம் வேண்டிக் கொண்டால் பொழிவான தோற்றம் பெறலாம் என்கின்றனர். மேலும் நம் மனதில் உள்ள தீய குணத்தினை நீக்கி நல்லவை நினைக்க வைக்கும் என்பது சிறப்பாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கோவிலிலும் தலவிருட்சம் என்று அழைக்கப்படும் மரம் ஒன்று இருக்கும். அதுபோல இந்த கோவிலில் தலவிருட்சம் என்று போற்றப்படும் 3500 ஆண்டுகளுக்கு பழமையான மாமரம் அமைந்துள்ளது. இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளது. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு!! 

இந்த நான்கு கிளைகளுமே ரிக், யஜூர், சாம, அதர்வண என்பதைக் குறிக்கிறது. இந்தக் கோவிலில் அம்பாலின் வேண்டுதல் சிவனால் நிறைவேற்றப்பட்டதால், இங்கு வரும் பக்தர்களின் அனைவரது வேண்டுதலும் நிறைவேறும் என்று கூறுகின்றனர். திருமணம் ஆகாத பக்தர்கள் இங்கு வந்து செல்வதினால் அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று கூறுகின்றனர். மேலும் குழந்தை வரம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பிறக்கும். இங்கு சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்ததால் இந்தத் தளத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக நிறைய பக்தர்கள் வருகின்றனர். இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 13 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு தங்கள் நேத்திகடனை செய்வார்கள். இறைவனிடம் வேண்டிய  வேண்டுதல்கள் நிறைவேறினால் சிவனுக்கும் அம்பாளுக்கும் வேஷ்டி சேலை வாங்கி அன்னதானம் படைத்து பூஜைகள் செய்கின்றனர். மிகவும் அழகிய மண்டபகங்களும், சுற்று பிரகாரங்களும் மிகவும் பழமை வாய்ந்து இருப்பதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாக இந்த கோவில் அமைந்துள்ளது.