24 special

ஒரு ரூபாய் சானிட்டரி பேடுகள்!! பயன்பெற்று வரும் பெண்கள்!!

SANITARY NAPKIN
SANITARY NAPKIN

தற்போது மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களின் சானிட்டரி பேடுகளில் பிளாஸ்டிக், பலவகையான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர் அதனை பயன்படுத்துவதால் அரிப்பு புண் வகைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. இதனால் பல பெண்கள் எந்த சானிட்டரி பாடுகளை வாங்கி பயன்படுத்துவது என்று குழம்பிப்போய் உள்ளனர். எந்த பாடுகளே வாங்கினாலும் ஏதாவது ஒரு அலர்ஜியாகி பெரிய அளவில் துன்பப்படுகிறார்கள். இதனை தடுப்பதற்காகவே நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்!!பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP) கீழ் , அரசாங்கம் ஜன் ஔஷதி சுவிதா சானிடரி நாப்கின்களை மலிவு விலையில் மாதவிடாய் சுகாதார சேவைகள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதற்காக பெண்களுக்கான பேட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் அறிமுகப்படுத்தியது.


இந்த பாடுகள்  நாடு முழுவதும் திறக்கப்பட்ட 10000க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திராக்கள் மூலம் விற்கப்படுகின்றன.இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை , 47.87 கோடிக்கும் அதிகமான ஜன் ஔஷதி சுவிதா சானிடரி பேட்கள் ஜன் ஔஷதி கேந்திராக்களில் விற்கப்பட்டுள்ளன.சுவிதா சானிட்டரி பேட்கள் அதிக மானிய விலையில் ரூ. 10000க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திராக்களில் இருந்து ஒரு பேட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே வாங்கி விற்கப்படும் ஒரு பேட் ஆகும்.சுவிதா சானிட்டரி பேடுகள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றன என்பதால் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் உள்ள பெண்கள் கூட இதனை எளிதில் வாங்கி பயன்படுத்த முடிகிறது. பேட் வாங்குவதற்கு காசு இல்லாமல் பழைய துணிகளை வைத்து இதுவரை பயன்படுத்திய பெண்கள் கூட தற்போது இந்தத் திட்டத்தின் கீழ்  ஒரு ரூபாய் கொடுத்து இந்த சானிட்டரி பேடுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஜன் ஔஷதி கேந்திராக்களிலும் விற்கப்படும் இந்த ஒரு ரூபாய் பேடுகள் ஆக்சி-மக்கும் தன்மை கொண்டவை மற்றும் நல்ல தரமான தரத்தை பராமரிக்கின்றன என்பதால் எந்தவித அலர்ஜி மற்றும் அரிப்புகள் எதுவும் இல்லாமல் இதனை பயன்படுத்தி வரலாம். பிரைவேட் நிறுவனங்களின் பாடுகளை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட இந்த ஒரு ரூபாய் பேடுகளை வாங்கி எந்தவித பக்க விளைவுகளும் அரிப்புகளும் அலர்ஜிக்கலும் இல்லாமல் பயன்படுத்தி பல பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் (PMBI), இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமானது, பெண்களிடையே சுகாதாரமான நடத்தையை மேம்படுத்துவதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் பிற விளம்பர ஊடகங்கள் மூலம் இந்த சுவிதா சானிட்டரி பேட்களுக்கான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றது. இது குறித்து தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது!!

அதில் ஒரு பேட் ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது என்று யாராலயும் நம்ப முடியாத அளவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய இந்த  ஜன் ஔஷதி சுவிதா சானிடரி நாப்கின் பாடல்கள் வெறும் ஒரே ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாதாரணமாக நாம் வாங்கும் பிரைவேட் நிறுவனங்களின் சானிட்டரி பேடுகள் 150 ரூபாய் விற்கும் நிலையில் வருடத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் மேல் இதற்காகவே செலவிட வேண்டி உள்ளது. இதனை எளிய மக்கள் வாங்க முடியாத நிலையில் இருப்பதால் நமது மத்திய அரசாங்கம் நடத்திக் கொண்டு வரும் மக்கள் மருந்தகத்தில் ஒரு பேக் சானிட்டரி பேட் வெறும் பத்து ரூபாய்க்கு கொடுத்து வருகின்றனர். இது ரொம்ப இயற்கையாக தயாரிக்கப்படும் என்பதால் எந்த ஒரு சைடு எஃபெக்ட்ஸும் இல்லாமல் இருக்கும்!! என்று ஒரு இளம் பெண் இந்த திட்டம் குறித்து பேசி உள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!