எப்படி படியில் தொங்கிய மாணவர்களை அடிக்கலாம் அந்த பெண்ணை கைது செய்யுங்கள் என ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய சமுக வலைத்தளத்தில் குரல் கொடுத்த நபர்கள் எல்லாம் இப்போது வெள்ளத்தில் ரஞ்சனா நாச்சியார் செய்த உதவிகளை பார்த்து இந்த பெண்ணையா கைது செய்ய சொன்னோம் என வருத்தம் அடைந்து இருக்கிறார்கள்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உணவுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் போரூர் அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் தனது பங்கிற்கு சமையல் செய்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று உணவுகளை அளித்து வருகிறார்.
அதில் ஒரு படி மேலே சென்று மழை வெள்ளத்தால் நாய்களும் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் அவைகளுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் மனிதர்களுக்கு மட்டுமின்றி நாய்களுக்கும் பிரத்தியேகமாக சமையல் செய்து வழங்கி வருகிறார்.குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைவ உணவையும், நம்மை காக்கும் கால பைரவர்களான நாய்களுக்கு சிக்கன் பிரியாணி பிரத்தியேகமாக செய்து மழை வெள்ளத்தால் உணவின்றி தவித்த நாய்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி வருகிறார். பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வரும் நிலையில் சற்று ஒரு படி மேலே யோசித்து நாய்களுக்கும் பிரத்தியேகமாக சிக்கன் பிரியாணி செய்து வழங்கி வந்தது வரவேற்பை பெற்றது.