ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்தும் கூடவே இறுதியாக அவருக்கு அழுத்தங்கள் உள்ளது என குறிப்பிட்டதும் தற்போது உலக அளவில் பெரும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது. கடந்த மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த, 'ஜி - 20' நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், டெல்லியில் நடந்த, 'ஜி - 20' உச்சி மாநாட்டை இந்தியா மிக சிறப்பாக தலைமையேற்று நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.ரசிய மொழியில் பேசிய புடின் வீடியோ 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது அந்த 45 நிமிட வீடியோவில், ரஷ்யா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளே இந்த வளர்ச்சிக்கான உத்தரவாதமாக உள்ளது.உண்மையைச் சொல்வதென்றால், இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி எடுக்கும் கடுமையான நிலைப்பாடுகளை பார்த்து, பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியம் அடைந்துள்ளேன்.இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலனுக்கு எதிராக மோடியை மிரட்டியோ, அச்சுறுத்தியோ முடிவெடுக்க வைக்க வற்புறுத்தலாம் என, என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அவ்வாறான அழுத்தங்கள் அவருக்கு உள்ளன என்பது எனக்கு தெரியும் என புடின் குறிப்பிட்டுள்ளார். மோடியை ரசிய அதிபர் பல இடங்களில் பாஸ் என குறிப்பிட்டார்.,
ரசியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போது அதை இந்தியா கண்டுகொள்ளாமல் நேரடியாக குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் வாங்கியது அப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரசியவிடம்இந்தியா கச்சாஎண்ணெய்வாங்ககூடாதுஎன பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டது ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இந்திய மக்களின் நலன் குறித்து சிந்தித்த மோடி நேரடியாக குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கினார் அதன் மூலம் தற்போது ஏற தால 500 நாட்களை கடந்தும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.