திமுக தொண்டரே கேள்வி எழுப்பியதால் அதிர்ச்சி திருவாரூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திராவிட மாடல அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆ.ராசா தமிழக அரசின் நிதி நிலை தெரியாமல் டி ஆர் பாலு ஆட்சிக்கு வந்தால் 1000 தருவோம் 2000 தருவோம் என இஷ்டத்திற்கு அடித்து விட்டதாக திமுகவை சேர்ந்த ராசா பேசியது பரபரப்பை உண்டாக்கியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த நிமிடம் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல் நாங்கள் உங்களுக்கு 4 ஆயிரம் கொடுத்தோமா இல்லையா என ஆ ராசா கேட்க அதற்கு கூட்டத்தில் இருந்த திமுக தொண்டரே எங்க கொடுத்தீர்கள் என பதில் கேள்வி எழுப்ப சற்று நிமிடம் திகைத்து போனார் ஆ. ராசா.
உடனே அருகில் இருந்த இன்னொரு உடன்பிறப்புகள் யாருடா அது என அதட்ட கேள்வி எழுப்பிய உடன் பிறப்பு அமைதியானார்.
மேலும் பேசிய ஆ. ராசா திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாததன் விளைவு கலைஞரின் பேனா சிலை சர்ச்சை, வாரிசு அரசியல் என்று ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது.
மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரை வைத்துக்கொண்டு திமுகவை விரட்ட பார்க்கிறார்கள். திமுக பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என தமிழக முதல்வர் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார் என பேசிய ஆ ராசா.
அதிமுக மூலமாக, அண்ணாமலை உள்ளே வர நினைத்தால் நாங்கள் அந்த அண்ணாமலைக்கு அரோகரா போட்டவர்கள். அந்த அண்ணாமலைக்கு அரோகரா போட்டவர் பெரியார். இந்த அண்ணாமலை தான் ஜுஜிபி என்றார்.
பொது கூட்டத்தில் திமுக தொண்டரிடம் பல்பு வாங்கியதோடு நில்லாமல் சொந்த கட்சியை சேர்ந்த டி ஆர் பாலு தேர்தல் அறிக்கையில் மாதம் ஆயிரம் ,2 ஆயிரம் தருவோம் என அடித்து விட்டு இருப்பதாக ஆ ராசா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து இருப்பது திமுகவிற்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.