தொடர் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. தக்காளி விலை உயர்ந்து இருப்பதை தெரியப்படுத்த ஒரு வித்தியாசமான விளம்பர உத்தியை கையாண்டு உள்ளது, வந்தவாசி சாலை, சோத்துப்பக்கத்தில் அமைந்து உள்ள ஆம்பூர் பிரியாணி கடை
பிரியாணி என்றாலே அது ஆம்பூர் பிரியாணி தான். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. ஆம்பூர் பிரியாணியின் கிளைகள் இன்று பல ஊர்களிலும் பார்க்க முடியும். அந்த வகையில், இந்த கடை நிர்வாகம் ஒரு வித்தியாசமான முறையில் ஒரு விளம்பர யுக்தியை செய்துள்ளனர்.
பொதுவாகவே, தக்காளி வரத்து அதிகரிக்கும் அத்தருணத்தில் ஒரு கிலோ தக்காளி 2 ரூபாய், 5 ரூபாய் என்று கூட விற்பனையாகும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. இப்படியான நிலையில் தற்போது ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்துக்கு வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்து இருக்கிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 140 வரை விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வாங்கப்பட்டு மீண்டும் விற்கப்படும் சிறு வியாபாரிகள், ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.160 வரைக்கும் விற்கின்றனர். பொதுவாகவே ஒரு நாளைக்கு 100 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இருக்கும். தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே லாரிகள் வருகிறது. மழை நின்றவுடன் தக்காளியின் விலை குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .
அதே நேரத்தில், ஆந்திரா கர்நாடகா மாநிலத்தில் தக்காளி விளைச்சலும் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதால் அடுத்து வரும் பல நாட்களுக்கு தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்படி ஒரு நிலைமையில், 1 கிலோ தக்காளி கொடுத்தால் 1 கிலோ பிரியாணி வழங்கப்படும் என "தக்காளி ஆஃபர்" போட்டு ஒரு பேனரை போஸ்ட் செய்து இருக்கின்றனர் சோத்துப்பாக்கம் ஆம்பூர் பிரியாணி கடை நிர்வாகத்தினர். மேலும் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
தற்போது இந்த போஸ்ட் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. காரணம் ...எந்த அளவுக்கு தக்காளி விலை உயர்ந்து உள்ளது பாருங்கள். எனவே அதற்கேற்றவாறு நாம் சமைப்பதை காட்டிலும், வாய்க்கு ருசியாக பிரியாணியையே தக்காளி விலைக்கு வாங்கி உண்ணலாம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்து உள்ளது இந்த போஸ்ட்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.