தீராத பிரச்சினையாக தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும் ஜெய் பீம் பட பிரச்சனை குறித்து அணைக்கட்டு மேற்கு ஒன்றியம் ஊடகப் பேரவை செயலாளர் அருண் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டதில் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், சூர்யாவுக்கு ஒரு திமிர்த்தனம் இருக்கு என்பதே என குறிப்பிட்டிருக்கிறார்.
நவம்பர் 1ஆம் தேதி வெளியான ஜெய் பீம் திரைப்படம் இன்று 23ஆம் தேதி ஆகியும் பெரு பூதாகரமாக வெடித்து வருகிறது. ஒருபக்கம் சூர்யாவுக்கு ஆதரவாகவும், மறுபக்கம் பாமக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் ஜெய்பீம் பட தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா மீதும், படக்குழுவினர் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கின்றது.
ஆக மொத்தத்தில் குறிப்பிட்ட சமூகமான வன்னியர்களின் சென்டிமெண்ட் விஷயங்களில் கைவைத்து காலண்டர் மூலமா வெறுப்பை திணித்து இருக்கிறார் சூர்யா என குற்றம் சாட்டுகிறார் அருண். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பின் அதில் இருக்கக்கூடிய எழுத்தைப் பார்க்கும் போது ஏதோ நக்கலாக எழுதுவது போல் தான் இருக்கிறதே தவிர உண்மையில் மனமுவந்து மன்னிப்பு கேட்பதாக இல்லை என்றும்,
மேலும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைவருக்கும் சூர்யா பதில் கொடுக்கும் நிலையில் மன்னிப்பு கேட்பது மட்டும் இயக்குனரா என்று பார்க்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றும், இது தவிர்த்து படப்பிடிப்பின்போது ஒரு குண்டூசி என்றால் கூட எங்கு இருக்கவேண்டும், அது திரையில் தெரிகிறதா இல்லையா என ஆராயும் அளவுக்குத்தான் ஒவ்வொரு ஷாட்ஸ் எடுப்பார்கள். இது சினி துறையில் இருக்கும் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
இப்படி இருக்கும்போது அவரது கவனத்திற்கு காலண்டர் இருப்பது தெரியவில்லை என குறிப்பிடுவது எவ்வளவு பெரிய பொய் என்பது அனைவருக்குமே தெரியும் என குறிப்பிட்டு இருக்கின்றார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சூர்யாவுக்கு ஒரு திமிர்த்தனம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அதேவேளையில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தப் பிரச்சனை மேலும் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அது போன்று பெரிய கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதனை சூர்யா புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பது நல்லது எனக் குறிப்பிட்டு இருக்கின்றார் அருண்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.