24 special

1000 விவகாரம் எம்எல்ஏ-வை சிறைபிடித்த பொதுமக்கள்!.....என்ன நடந்தது?

mk stalin
mk stalin

தமிழக அரசு அறிவித்த உரிமை தொகை திட்டம் அறைவித்த பிறகு தங்களுக்கு வரவில்லை என்று அங்கங்கே பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் அருகே எம்எல்ஏ-வை சிறைபிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் வாக்குறுதியை அள்ளிக்கொடுத்தது. அப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது. இதனை பெண்களும் ஆசையாக நம்பி வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள்.


ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் அந்த திட்த்தை செயல்படுத்தாமல் குழியில் பதுக்கி வைத்தனர்.கடந்த செப்டம்பர் மாதம் அதனை வெளியில் கொண்டுவந்து மக்களிடம் நல்ல பெயரை பெற்றது. ஆனால் அடுத்த மாதமே இந்த திட்டத்தில் மூலம் பல பெண்களுக்கு தொகை வரவில்லை என்று புகார் எழுந்தது, அந்த அந்த மாவட்டத்திலும் உள்ள பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். அதும் தகுதியின் அடிப்படையில் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக நிர்வாகியின் மனைவிகளுக்கு தொகை வருகிறது.

ஆனால், தினசரி கூலிக்கு செல்லும் பெண்களுக்கு தடைபடுவதாக குற்றச்சாட்டு பரவி வருகிறது.இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்காக சென்றபோது அவரை கீழ்கதிர்பூர் கிராம பெண்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி எழிலரசனை வழிமறித்து எங்களுக்கு ஏன் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக தெரிவித்து அனைவரும் ஒன்று கூடி பணம் கிடைக்கவில்லை என கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பெண்கள் ஒன்று திரண்டதால் என செய்வதுஎன்று தெரியாமல் சிறு பிள்ளை தனமாக கோவித்துக்கொண்டு பிரதமர் மோடி சொன்னாரே 15லட்சம் தருவதாக அவரிடம் எல்லாம் கேட்க மாட்டீர்களா? இந்த 1000ம் பற்றி மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்று முகத்தில் கோபத்துடன் பேசினார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் மோடி யா இங்கே இருக்கிறார்? நீங்கள் தான் இங்க இருக்கீங்க உங்க கிட்டதான் கேட்க முடியும் என்று பதிலளித்தார். 

இதற்கு திமுக எம்எல்ஏ எழிலரசன் கிராம நிர்வாக அலுவலரை அளித்து மக்களின் குறைகளை சொல்லி, இவர்களைப் பார்த்தால் வருமான வரி கட்டுவது போல் உள்ளதா ? ஏன் இதனை சரியாக ஆய்வு செய்ய மாட்டீர்கள் என உங்கள் மீது, நிர்வாக ரீதியாக பணியிட நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். அரசு அலுவலர்களுக்கு மாதம் தோறும் சம்பளம் சம்பாதித்தால் மட்டும் போதுமா, மக்கள் நலன் குறித்து அக்கறை வேண்டாமா என்று கிராம நிர்வாக அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டார்.

இதே போல் பல கிராம பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முடங்கி கிடக்கின்றனர். மேலும், பல ஊர்களில் சாலை மறியல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். ஆனால், முழுமையாக செயல்படாத திட்டத்திற்கு இண்டியா கூட்டினியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அழைத்து மகளிர் உரிமை மாநாடு வரை சென்றது பெண்களிடம் திமுக மீது மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது.