பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான் இந்த அப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம், இவர் தமிழ் சினிமாவில் 'என் காதல் கண்மணி' படத்தின் மூல அறிமுகமானார். தொடர்ந்து விக்ரம் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் அடிக்க இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. தற்போது தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யாவிற்கு பிறகு விக்ரம் 4ம் இடத்தில் உள்ளார்.
இவர் நடித்த அனைத்து படங்களிலும் வித்தியாசமான தோற்றத்தை தேர்ந்தெடுத்து தன்னை அர்ப்பணித்து நடிப்பார். அதிலும், விக்ரம் நடித்த பிதாமகன், இராவணன், ஐ போன்ற படங்களில் இவரது வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்தியிருப்பார்.இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்த திரைப்படம் ‘தங்கலான். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது தங்கலான் படத்தின் டீசர் இன்று காலையில் வெளியானது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட துயரத்தை வெளிப்படுத்தும் கதைக்களமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம். இந்த டீசரை பார்க்கும்போது விக்ரம் நடிப்பும் அவரது தோற்றமும் பார்ப்போரை மிரள வைக்கிறது. மேலும், போரை மட்டுமே டீசரில் காண்பித்துள்ளார்கள்.
இதைத்தாண்டி கதைக்களம் எப்படி இருக்கும் என்று ட்ரைலர் அல்லது படத்தை பார்த்தால் தான் தெரியும்.இந்த டீசரின் நடுவில் ஒரு ராஜ நாகத்தின் தலையை சியான் விக்ரம் பிய்த்து எறியும் காட்சிகள் தியேட்டரில் பார்க்கும்போது திரி தீப்பிடிக்கும் அளவிற்கு விசில் சத்தம் பட்டைய கிளப்பும். மாளவிகா மோகனை காட்டும் விதம் புதியதாக இருக்கிறது. வில்லனை இன்னும் கொஞ்சம் சிறப்பாக காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. டிரெய்லரில் கதையை கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும். ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை காட்சிக்கு ஏற்றாற்போல் சிறப்பாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் 'இதுவரை நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படங்கள் என்றால் பிதாமகன், இராவணன், ஐ போன்ற படங்களை சொல்லலாம். ஆனால், தங்கலானுடன் ஒப்பிட்டால், அதெல்லாம் 3% கூட கிடையாது. மிக கடுமையான காட்சிகளை உள்ளடக்கி தங்கலான் படம் தயாராகியுள்ளது என்றார். நடிகர் விக்ரம் ஒரு ஒரு படத்திற்கும் தன்னை அர்ப்பணித்து நடிப்பார். ஆனால் இதில் நடித்ததை சொல்லும் பொது படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில். ஏற்கனவே தமிழ் பிரியாடிக் பிலிம் வரிசையில் இதேபோல் பொன்னியின் செல்வன் மற்றும் யாத்திசை படங்கள் வெளியாகி இருந்தன. இப்போது தங்கலான் படமும் அந்த வகையில் இருக்குமா அல்லது புதுசா இருக்குமா என்று வெளியான பிறகு தான் தெரியவரும். தங்கலான் படம் அடுத்த வருடம் ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது.